Wednesday, September 14, 2011

வானொலியை கண்டுபிடித்தவர் யார்?

வானொலியை கண்டுபிடித்தவர் யார்?

வானொலியை கண்டறிந்தவர் யார்? என்ற கேள்விக்கு அனைவரும் கூறும் பதில், மார்கோனி. அப்படியென்றால் நீங்கள் சொல்வது தவறு. மார்கோனி, வானொலியை கண்டுபிடித்தவர் என்று ஏற்றுகொண்டலும், அவருக்கு முன்பே ஒருவர் வானொலியை கண்டுபிடித்துவிட்டார்.

1900 களில், மார்கோனி வானொலியை கண்டுபிடித்தார். ஆனால், அதற்கு முன் 1897 - ம் ஆண்டு நம் இந்திய நாட்டை சேர்ந்த ஜெகதீஷ் சந்திரபோஸ் எனும் விஞ்ஞானி வானொலியை கண்டுபிடித்துவிட்டார்.

ஜெகதீஷ், எப்படி வானொலியை கண்டுபிடித்தார், அவர் பயன்படுத்திய தொழில்நுட்பம் இவற்றை அறியும் முன் அவரை பற்றி சுருக்கமாக அறிவோம்.

அப்போதைய வங்காளத்தை சேர்ந்த முனிஷிகன்ச் மாவட்டத்தில் (தற்போது வங்காளதேசம்) 1858 - ம் ஆண்டு நவம்பர் 30 - ந் தேதி ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்தார். ஜெகதீஷின் தந்தை பகவான் சந்திரபோஸ், இவர் பரித்பூரின் காவல் துணை ஆணையராக பணிபுரிந்தவர். தாய் மொழிக்கு பின் ஆங்கிலம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று பகவான் கருதியதால் ஜெகதீஷ்யை, அவர், ஆங்கில வழி பள்ளியில் சேர்த்தார்.

1869 - ம் ஆண்டு செயின்ட் சேவியர் பள்ளி, கொல்கத்தாவில் உயர்நிலை பள்ளி படிப்பை தொடங்கினார். பின்னர் 1875 - ம் ஆண்டு நடந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை படித்தார். அடுத்த கட்டமாக, முதுகலை பட்டதை இயற்கை அறிவியல் துறையில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பயின்றார்.

1885 - ல் நாடு திரும்பிய ஜெகதீஷ், சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அவரின் முதல் ஊதியம் 200 ருபாய். முதல்முதலில் இயற்பியல் துறைக்கு அக்கல்லூரியில் செய்முறை கூடம் அமைதவரும் இவரே ஆவார்.

1887 - ல் அபாலா என்கிற பெண்ணுடன் அவருக்கு திருமணமானது. அபாலா, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர்.

1893 - ல் ஜெகதீஷ் வானொலி கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளை தொடங்கினார். கொல்கத்தா டவுன் ஹாலில் 'அதிர்ஷ் அலோக்' (மறைந்த ஒளி) என்ற ஆய்வறிக்கையை சமர்பித்தார். மேலும், படிப்படியான ஆய்வு சோதனையில் டிசம்பர் 1895 - ல் வானொலிக்கான அலை வடிவத்தை கண்டுபிடித்தார். இதே மாதத்தில் இவரது இரண்டாம் ஆய்வறிக்கை, லண்டன் ஆய்வு நூல் ஒன்றில் 36 - ம் பகுதியில் வெளியானது.

1897, மார்கோனி இந்தியா வந்தார். அவர், வானொலி பற்றி ஆய்வு ஒன்றினை கொல்கத்தாவில் சமர்பித்தார். இதற்கு ஒரு ஆண்டு முன் ஜெகதீஷ் லண்டனில் மார்கோனியை சந்தித்தார். அப்போது, இருவரும் தங்களது ஆய்வுகளை பற்றி பரிமாரிகொண்டனர். (இருவரும் ஒரே காலகட்டத்தில் வானொலிக்கான ஆய்வுகளில் ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது).

வானொலி அலையை உருவாக்க பகுதி மின் கடத்தியை (செமி கண்டக்டர்) பயன்படுத்தினார். பகுதி மின் கடத்தியை அலை கடத்த முதல்முதலில் பயன்படுதியவரும் ஜெகதீஷ் தான். இதன் பின் பல அறிவியல் ஆய்வுகளில் பகுதி மின் கடத்திகள் பயன்படுத்தப்பட்டன.

பின்னர், 1897- ம் ஆண்டு கொல்கத்தாவில் வானொலிக்கான ஆய்வு முழுமைப் பெற்றது.

ஜெகதீஷ், வானொலியின் அலைக்கற்றை பரப்பக் கொம்பு வடிவிலான அலை கடத்தியை (ஆன்டெனா) பயன்படுத்தினார். டை எலெக்ட்ரிக் லென்ஸயை பயன்படுத்தி வானொலி அலையை உருவாக்கினார். அது, 60 GHz அதிர்வலைகளை உருவாகியது. மேலும், 1.3 மில்லி மீட்டர் பண்ணொளி உள்வாங்கி, NRAO 12 மீட்டர் நுண்ணோக்கி போன்றவற்றையும் பயன்படுத்தினார்.

60 ஆண்டுகள் செலவு செய்ய வேண்டிய ஆய்வை 10 ஆண்டுகளில் ஜெகதீஷ் செய்து முடித்தார் என்று விஞ்ஞானிகள் அவரை பெருமைப்படுத்தினர். பின்னர், கண்டுபிடிக்கப்பட்ட P- வகை மற்றும் N- வகை பகுதி மின் கடத்திகளுக்கு, ஜெகதீஷின் ஆய்வுகளே ஆதாரமாக அமைந்தது.

வானொலியை கண்டுபிடித்த பின் ஜெகதீஷ், தாவரவியலில் தன் ஆய்வுகளை மேற்கொண்டார். 1927 - ம் ஆண்டு தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதையும் ஜெகதீஷ் சந்திரபோஸ் கண்டுப்பிடிதார்.

இயற்பியல், தாவரவியல் என இரண்டிலும் முக்கியமான பல ஆய்வுகள் செய்து உலக அறிவியலுக்கு பல கண்டுப்பிடிப்புகளை கொடுத்தவர் இந்தியர் என்பதில் நாம் பெருமைப்படலாம்.

No comments:

Post a Comment