Saturday, October 29, 2011

வர்மங்களின் வகைகள்..!

வர்மங்களின் வகைகள்..!
வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார்.இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு வர்மம்”

படுவர்மம்

நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார்.

தொடு வர்மம்

இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.
 தொடு வர்மம்

இதுவும் படுவர்மத்தைப் போலவே பலமாக தாக்கப்படுவதன் மூலமே ஏற்படுகின்றது. ஆயினும் இது படுவர்மம் போல அத்தனை ஆபத்தானதாக இருக்காது என்கிறார். இந்த முறைகளை எளிதில் குணப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார்.

தட்டு வர்மம்

ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தில் தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாதவாறு மிகமிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புக்களை ஏற்படுத்துவதே தட்டுவர்மம் ஆகும்.

நோக்கு வர்மம்

பார்வையை ஒரே இடத்தில் பாய்ச்சி அதன் மூலம் விளைவுகளை உண்டாக்குவதே நோக்கு வர்மம் எனப்படும். இந்த வர்ம முறையும் ஆபத்தானது என்று குறிப்பிடும் அகத்தியர், நோக்கு வர்ம முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகரானவர்கள் எவரும் உலகில் இருக்கமாட்டார்கள் என்கிறார்.

இவை தவிர, உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகளையும் விரிவாக பட்டியலிட்டிருக்கிறார், அதன் படி...

தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
 நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,
 உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,
 முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,
 கைகளின் முன் பக்கத்தில் 9 வர்மப் புள்ளிகளும்,
 கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,
 கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,
 கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,
 கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.
 Author: தோழி / Labels: அகத்தியர், வர்மம்

வர்மத்தின் அதிசயங்கள் !!

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விழைகிறேன்:

ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.
வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.
ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.
ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.
நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.
மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்

Tuesday, October 11, 2011

பெர்லின் சுவரும் அதன் சுவடுகளும்…

பெர்லின் சுவரும் அதன் சுவடுகளும்…


பெர்லின் சுவர் இடிப்பு: ஒரு சரித்திரத் தவறு திருத்தப்பட்டதன் 20-வது ஆண்டு
பெர்லின் சுவர்…
...
மனித சுதந்திரத்துக்கு எதிரான அடையாளமாகப் பார்க்கப்பட்ட இந்த சுவர் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகின்றன. 1989 ம் ஆண்டு இதே நவம்பர் மாதத்தில்தான் மக்களால் தகர்க்கப்பட்டது.
இன்று பெர்லினில் அந்நாட்டு மக்கள் பெரும் உற்சாகத்துடன் இந்த நாளைக் கொண்டாடுகின்றனர். காரணம் பெர்லின் சுவரின் ‘பின்னணி’, அந்த சுவர் தகர்க்கப்பட்டதால் தாங்கள் அடைந்த சுதந்திரத்தின் மதிப்பு போன்ற உண்மைகள் புரிந்தவர்கள் அவர்கள்.
பெர்லின் சுவர் கட்டப்பட்டதன் பின்னணி?
இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வரை ஜெர்மனி என்பது ஒரே நாடு. ஆனால் போரில் ஹிட்லரின் நாஸிப் படைகள் தோற்ற பிறகு ஜெர்மனியை நான்கு துண்டுகளாக கூறுபோட்டன சோவியத் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நேசநாடுகள். அவரவருக்குப் பிடித்த பகுதிகளை தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தனர். ஜெர்மனியின் ஒன்றுபட்ட தலைநகராக இருந்த பெர்லின் நகரும் நான்கு துண்டுகளாக்கப்பட்டது.
ஆனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் நேச நாடுகளுக்குள் கடும் மோதல் எழ, சோவியத் ரஷ்யாவைத் தவிர மற்ற மூன்று நாடுகளும் ஓரணியாக நின்றன. இவை தங்கள் வசமிருந்த ஜெர்மனியின் பகுதிகளை தனி நாடாக்கின. அதுதான் மேற்கு ஜெர்மனி.
சோவியத் ஒன்றியம் மட்டும் தன்னிடமிருந்த பகுதியை தனி நாடாக அறிவித்தது 1949-ல். அதுதான் கிழக்கு ஜெர்மனி (ஜிடிஆர் – ஜெர்மன் டெமாக்ரடிக் ரிபப்ளிக்) இதன் தலைநகராக கிழக்கு பெர்லின் இருந்தது. மேற்கு ஜெர்மனியின் தலை நகர் மேற்கு பெர்லின்.
கிழக்கு மேற்கு பெர்லின்கள் அடிப்படையில் ஒரே நகரம்தான். சென்னை அண்ணா சாலைக்கு இந்தப் பக்கம் ஒரு நகரம், அந்தப் பக்கம் ஒரு நகரம் என்று திடீரென்று எல்லை வகுத்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இது. சோவியத் – அமெரிக்க பனிப்போரின் உச்சகட்ட நாட்கள் அவை.
இதனால் கிழக்கு ஜெர்மனியிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் மேற்கு ஜெர்மனிக்கு ஓடிவிட்டார்கள். குறிப்பாக 1950, 51, 52, 53-ம் ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக இப்படி எல்லை கடந்தார்கள். எனவே தனது அனைத்து எல்லைகளையும் சீல் வைத்து மக்களை ஓடவிடாமல் தடுத்தது கிழக்கு ஜெர்மனி.
ஆனால் பெர்லின் நகருக்குள் ஊடுருவலைத் தடுக்க முடியவில்லை.
எனவே 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே பெரிய சுவர் எழுப்பி மக்கள் இருபுறமும் செல்லாதபடி தடுத்தது கிழக்கு ஜெர்மனி. சுவருக்கு அந்தப் பக்கம் அமெரிக்காவும், இந்தப் பக்கம் சோவியத்தும் படைகளை நிறுத்தி வைத்திருந்தன.
உரிமைகள், உறவுகள், வர்த்தகம், வாழ்க்கை முறை என அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்டனர் மக்கள். 28 ஆண்டுகள் இந்த பாதிப்பு தொடர்ந்தது. கிழக்கு ஜெர்மனி மக்கள் அந்த சுவரைத் தாண்ட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டனர்… அல்லது கைதாகி சிறைவாசம் அனுபவித்தனர்.

பெர்லின் சுவருக்கு முடிவு கட்டிய முன்னாள் சோவியத் அதிபர் மிகையீல் கார்பசேவ், அமெரிக்க அதிபர் புஷ் (சீனியர்) மற்றும் ஜெர்மனியின் சான்ஸலர் ஹெல்மட் கோல்
சோவியத் – அமெரிக்க பனிப்போரின் இறுதிதான், மக்களைப் பிரித்து வைத்திருந்த இந்த நீண்ட பெர்லின் சுவருக்கு முடிவு கட்டியது.
1989ம் ஆண்டு நவம்பர் 9-ம் நாள் மக்கள் இந்த சுவரைத் தாண்டி சந்தித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அடுத்த இரு தினங்களில் சுவரின் ஒரு பகுதியை மக்களே அடித்து நொறுக்கிவிட்டனர். கிழக்கு மேற்காகப் பிரிந்திருந்த ஜெர்மனிகளும் ஒன்றாகின.
இன்று பெர்லின் சுவர் இருந்த இடத்தில் அதன் சுவடு மட்டுமே மிச்சமுள்ளது. 20 ஆண்டுகள் கடந்து விட்டன… காலம் மக்களின் வலிகளை, மனதின் ரணங்களை ஆற்றிவிட்டாலும், இந்த சுதந்திரத்துக்கு தாங்கள் கொடுத்த விலையை நினைவுபடுத்திக் கொள்கின்றனர் ஜெர்மனி மக்கள். காயம் குணமாகிவிட்ட இடத்தில் மிச்சமிருக்கும் வடுவைத் தடவி, வலியை நினைவுபடுத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இது.
இந்த நினைவூட்டல்தான், தாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் மதிப்பை அடுத்த தலைமுறைக்கும் உணர்த்தும் என அந்த மக்கள் நம்புவதால் நடத்தப்படும் கொண்டாட்டம் இது.
இனி பெர்லின் சுவர் வரலாறு… அரிய புகைப்பட வடிவில்…

1961: ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே முள்கம்பி வேலி அமைக்கு பணியில் கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ஈடுபட்டனர். அதை மேற்கு பெர்லின் மக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சி.

1961- பெர்லின் நகரின் மையப்பகுதியான கிரன்டன்பர்க் வாயில் முள்கம்பி வேலியமைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டது.

1961: கிழக்கு பெர்லின் பகுதியில் சுவர் எழுப்பப்படுவதைப் கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸார்…

1961- ல் புதிதாகக் கட்டப்பட்ட பெர்லின் சுவரை எட்டிப் பார்க்கும் மேற்கு பெர்லின் சிறுமி…

1961 -அறுபதுகளில் மிகப் புகழ்பெற்ற புகைப்படம் இது. ஷுமென் எனும் கிழக்கு ஜெர்மனி வீரர் , பெர்லின் சுவரை கட்டிக் கொண்டிருந்தபோதே எகிறி குதித்து மேற்கு ஜெர்மனிக்குள் ஓடும் காட்சி… சோவியத் கட்டுப்பாட்டில் கிழக்கு ஜெர்மனி வாழ்க்கை கொடுமையானது என்பதை உலகுக்குச் சொல்ல அமெரிக்கா இதைப் பயன்படுத்திக் கொண்டது.

அம்மா கிழக்கு பெர்லினில்… மகளோ மேற்கு பெர்லினில்… குறுக்கே நிற்கும் முள்வேலி கொண்டை வைத்த சுவரைத் தாண்டி பாசத்தைப் பரிமாறிக்கொள்ளும் காட்சி…

1962 – பெர்லின் சுவரைக் கடக்க முயன்ற தங்கள் நாட்டுக்காரரை கிழக்கு ஜெர்மனி வீரர்கள் சுட்டுக் கொன்று தூக்கிச் செல்கிறார்கள்.

1962-ஆண்டு பெர்லின் சுவர் தோற்றம்… மொத்த நீளம் நகரின் மேற்குப் புறத்தில் இருந்த மூன்று பகுதிகளிலும் சேர்த்து 156 கிமீ. இதில் பெர்லினைப் பிரித்த சுவரின் நீளம் 43 கிமீ.


1985- கோபுரம் அமைத்து கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி வீரர்கள்…

1989 – பெர்லின் சுவருக்கு எதிராய் கிழக்கு ஜெர்மனி மக்கள் நடத்திய போராட்டம்…

1989-நவம்பர் – பெர்லின் சுவரை உடைக்கும் மேற்கு ஜெர்மனிவாசிகள். கிழக்கு ஜெர்மனி போலீசார் அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறார்கள்…
1989- நவம்பர்- உடைக்கப்பட்ட சுவரின் வழியே எட்டிப்பார்க்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸ்காரர்.
28 ஆண்டுகள் மக்களைச் சிறைவைத்திருந்த சுவரை, மக்களே உடைத்த காட்சி…



1989 நவ 12 -மேற்கு ஜெர்மனிக்குள் வெள்ளமாய் நுழையும் மக்கள்..
பெர்லின் சுவரும்… அதன் சுவடுகளும்!

2009: சரித்திர சின்னமாய் மிச்சமிருக்கும் பெர்லின் சுவர்


2009- நவம்பர் 9-12: பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 20ம் ஆண்டு கொண்டாட்டம்!

முசோலினி

முசோலினி உலகை பயமுறுத்திய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடி புகழ் பெற்றவர்.1922 முதல் 21 ஆண்டுகாலம் இத்தாலியின் பயங்கரமான சர்வதிகாரியாக விளங்கிய இவர் ஹிட்லரின் நண்பர்.
ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முசோலி புரட்சிக்காரர்களால் கொல்லப்பட்டார்.இந்த கொலை நடந்த முறை சாதரணமானது அல்ல எல்லோருக்கும் சிம்மசொப்பனமாக இருந்த இந்த சர்வதிகாரியையும்,அவருடைய காதலியையும் சுட்டுக்...கொன்று,பிணங்களை விளக்கு கம்பம் ஒன்றில் தலை கீழாக தொங்கவிட்டார்கள்.

தொழிலாளியின் மகன்
இத்தாலியில் இரும்புப்படறை நடத்திய கொல்லர் ஒருவரின் மகனாக 1883 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி பிறந்தார்.முசோலினியின் தாயார் பாடசாலை ஆசிரியை.அப்போது இத்தாலியில் மன்னர் ஆட்சி நடந்து வந்தது.முசோலியின் தந்தை மன்னராட்சி ஒழித்து மக்களாட்சி மலர வேண்டும் என்ற கருத்துடையவர் .
தன் இரும்பு பட்டறைக்கு வருகின்றவர்களிடம் எல்லாம் அரசியல் பேசுவார்.அதனால் முசோலினிக்கு இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது.பாடசாலை படிப்பை முடித்ததும் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார்.இலத்தீன், பிரெஞ்சு,ஜெர்மன் ,ஸ்பானிஷ் ,ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்றறிந்த அவர் பேச்சாற்றலும்
ஆசிரியர் தொழிலை விட்டுவிட்டு சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றினார்.பிறகு கம்யூனிஸ்ட் பத்திரிகை ஒன்றில் ஆசிரியரானார்.பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் பரபரப்பை உண்டாக்கின .ஒரு கட்டுரைக்காக அவருக்கு ஓராண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.சிறையிலிருந்து விடுதலையான போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அவரை சிறை வாசலில் வரவேற்றனர் .மறுநாளே அவந்தி என்ற புரட்சி பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார் .
முதலாம் உலகப்போர்
இந்த நிலையில் 1914 ஆம் ஆண்டு முதலாம் உலகப்போர் நடந்தது.முசோலினி இராணுவத்தில் சேர்ந்தார் .அதே ஆண்டில் தான் ஜேர்மனியில் ஹிட்லரும் இராணுவத்தில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.போரில் முசோலினி படுகாயமடைந்து ஊருக்கு திரும்பினார்.
1919 இல் உலகப்போர் முடிவடைந்தது.போரில் இத்தாலியில் மட்டும் 650,000 பேர் பலியானார்கள்,மேலும் 1,000,௦௦௦ பேர் படுகாயமடைந்திருந்தார்கள்.இத்தாலியின் பொருளாதாரமே சீரழிந்தது.எங்கு பார்த்தாலும் பசியும் பட்டினியும் .நாட்டில் கலகங்கள் மூண்டன.
இந்த சூழ்நிலையில் 1920 இல் பாசிஸ்ட் கட்சியை முசோலினி தொடங்கினார்.1921 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் முசோலினி கட்சி ஆட்சியை பிடிக்க முடியாது விட்டாலும் 30 இடங்களை கைபற்றியது. முசோலினி பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சி தலைவரான முசோலினி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய வீராவேச சொற்பொழிவுகள் ஆளும் கட்ச்சியினருக்கு அச்சமூட்டின.பாராளுமன்றத்தை அமைதியாக நடத்தவிடாமல் குழப்பம் விளைவித்து கொண்டிருந்தார் முசோலினி.அது மட்டுமல்ல,ஊர் ஊராக சென்று பொது கூட்டங்கள் நடத்தி உணர்ச்சி ததும்ப பேசி ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டார்.
மக்கள் தன் பேச்சில் மயங்கி கிடக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட முசோலினி ஒவ்வொரு ஊரிலும் அராஜகம் நடத்தி ,அரச அலுவகங்களை கைப்பற்றும் படி தன் கட்சியினருக்கு கட்டளையிட்டான்.அதன் படி அவர் கட்சியினர் கிளர்ச்சியாளர்களையும் பொதுமக்களையும் அழைத்துக்கொண்டு பயங்கர ஆயுதங்களால் அரசு அலுவகங்களை தாக்கினார்கள்.ஊழியர்களை விரட்டி அடித்து விட்டு அலுவலகங்களையும் சொத்துக்களையும் கைப்பற்றி கொண்டனர் .
1922 ஒக்டோபரில் முசோலியின் கரும் சட்டை படை இத்தாலியின் தலைநகரை பிடிக்க திரண்டு சென்றது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் அமைச்சரவையை இராஜினாமா செய்யுமாறு மன்னர் கட்டளையிட்டான்.மந்திரி சபை பதவி விலகியதும் ஆட்சி பொறுப்பை முசோலினியிடம் ஒப்படைத்தனர் .
அடக்குமுறை ஆட்சிக்கு வந்த முசோலி''இத்தாலியின் முன்னேறத்திற்காக நான் பல தீவிர நடவடிக்கைகளை எடுக்கப் போகிறேன்.இதை எதிர்ப்பவர்களை அடியோடு அழித்து விடுவேன் ".என்று அறிவித்தார்.
எதிர்க்கட்சிகளை தடை செய்தார். பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கினார்.தன்னை எதிர்த்தவர்களை நாடு கடத்தினார்.தன் எதிரிகளை சிறைச்சேதம் செய்யும் படி உத்தரவிட்டார் .மூன்றே ஆண்டுகளில் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000,000 க்கு மேல்.இவ்வளவு கொடுமைகள் செய்த முசோலினி மக்களை கவர பல திட்டங்களை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு இயந்திர கலப்பைகளை வழங்கினார்.அதனால் உணவு உற்பத்தி பெருகியது.வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.வரிகள் குறைக்கபட்டன. மருத்துவ வசதிகள் பெருகின. இதனால் முசோலினியை மக்கள் ஆதரித்தனர். நிலைமை தனக்கு சாதகமாக இருந்ததால் பொது தேர்தலை நடாத்தினர்.அதில் அவருடைய கட்சி மகத்தான வெற்றி பெற்றது.அதன் பின் பாராளுமன்றத்தின் அதிகாரங்களையும் தானே எடுத்துக்கொண்டார் .
1922 ஆம் ஆண்டு முதல் இத்தாலியின் மாபெரும் சர்வாதிகாரியாக முசோலினி விளங்கினார்.1933 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ஆட்சியை கைப்பற்றிய ஹிட்லர் முசோலினியின் நண்பரானார். 1934 இல் வெனிஸ் நகருக்கு சென்று முசோலினியை சந்திந்து பேசினார் ஹிட்லர் . அதனை தொடர்ந்து இத்தாலி இராணுவத்தை பலப்படுத்தவும் யுத்த தொழிற்சாலைகளை அமைக்கவும் ஹிட்லர் உதவினார்.
இந்நிலையில் அரசாங்க விருந்து ஒன்றில் கிலார என்ற அழகியை முசோலினி சந்தித்தார்.தனது வசீகர பேச்சாற்றலால் கிளாராவை கவர்ந்த முசோலினி அவளை தன் காதலி ஆக்கிகொண்டான்.
இரண்டாம் உலகப்போர்
1939 இல் இரண்டாம் உலக போர் ஆரம்பமானது.ஹிட்லரும் முசோலினியும் ஓரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தனர்.முதலில் இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. பிறகு போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும் முசோலினிக்கும் தோல்விகள் ஏற்பட்டன.</p>
இதனால் இத்தாலி மக்களிடம் செல்வாக்கை இழந்தான்.அவரை பாசிஸ்ட் கட்சி மேலிடம் பதவி நீக்கம் செய்து வீட்டு காவலில் வைத்தனர்.முசோலினியை காப்பாற்ற விரும்பிய ஹிட்லர் தனது உளவுப்படையை அனுப்பினார்.உளவுப்படையினர் முசோலினியை மீட்டனர் .
முசோலினியின் மரணம்
வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது. தன் மனைவி உடனும் காதலி கிளாராவுடனும் அங்கு சென்ற முசோலினி ஒரு அரசாங்கத்தை அமைத்துக்கொண்டார்.
அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சிகர இயக்கம் தோன்றியது.இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.புரட்சிக்காரர்களால்தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த முசோலினி தன் மனைவியுடனும் காதலியுடனும் அண்டை நாடான சுவிசலாந்துக்கு தப்பியோட முயற்சி செய்தான்.இரண்டு இராணுவ லொறிகளில் தனது இரண்டு குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான். அன்று மாலை உடல்கள் கீழே இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்திற்கு கொண்டு சென்று புதைக்கப்பட்டன.புதைப்பதற்கு முன் குற்றவியல் ஆராய்ச்சி நிபுணர்கள் முசோலியின் மூளையை எடுத்து சென்றனர்.
ஆனால் வழியிலேயே அந்த லொறிகள் புரட்சிகாரர்களினால் மடக்கப்பட்டது.முசோலினியையும் கிளாராவையும் புரட்சிக்காரர்கள் பிடித்தனர்.முசோலினியின் மனைவி லொறிக்குள் பதுங்கி கொண்டதால் அவள் புரட்சிகார் கண்ணில் படவில்லை.
இச்சம்பவம் 1945 ஏப்ரில் 27 ஆம் திகதி இடம் பெற்றது.அன்று டாங்கோ நகரில் ஒரு அறையில் முசோலினியும் கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர்
மறுநாள் வந்து இயந்திர துப்பாக்கியால் இருவரையும் புரட்சிக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள் .முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டு கொண்டனர். அவர்களது உடல்கள் மிலான் நகருக்கு கொண்டு செல்லப்பட்டு மின் கம்பத்தில் தலைகீழாக தொங்கவிடப்பட்டது.

பிளேட்டோ

பிளேட்டோ (ஒரு பக்க வரலாறு)"
சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய காலம். கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ, ‘குடியரசு’ எனும் அரசியல் ஆய்வு நூலில், முடியாட்சியையும் மக்களாட்சியையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். அரசியல் ஞானம் இல்லாத மக்களால் தேர்வு செய்யப்படும் தலைவர்கள் தலைமைக்குத் தகுதியானவர்கள் அல்ல என வாதிட்டதுடன் நில்லாமல், தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமும் வகுத்திருந்தார்.

பிளேட்டோவின் அரசியல் ஞானத்தை அறிந்த சிசிலி நாட்டின் அரசன் டேயானியஸ், "நீங்கள் ஆசைப்பட்டதுபோல் ஐரோப்பிய கண்டம் முழுவதற்கும் ஒரு லட்சிய அரசு அமைக்கலாம், வாருங்கள்" என அழைப்பு விடுத்தான். ஆசையோடு வந்த பிளேட்டோ, அரசன் ஆடம்பரப் பிரியனாகவும், நாடு பிடிக்க விரும்பும் சுயநலக்காரனாகவும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அரசவையிலேயே, "உன் தலைமையில் லட்சிய அரசு அமைக்க முடியாது. உனது சுயநலத்தால் இந்தப் பதவியையும் நீ விரைவில் இழந்துவிடுவாய். சுயநலமற்றவனையே தலமை தேடி வரும்!" என்று தைரியமாகச் சொன்னார்.

ஆத்திரமடைந்த அரசன், பிளேட்டோவை அடிமையாக விற்க உத்தரவிட்டான். சந்தையில் ஏலப்பொருளாக நிறுத்தப்பட்ட பிளேட்டோவை, அவரது மாணவர் அன்னிசெரஸ் பெரும் கிரயம் கொடுத்து மீட்டார்.
கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் கி.மு. 427-ல் ஒரு பிரபுவின் வீட்டில் செல்வச் செழிப்பில் பிறந்த பிளேட்டோ, சிறு வயதிலேயே சோக்ரடீஸின் தத்துவஞானத்தில் மயங்கி, அவரது சீடரானார். சாக்ரடீஸிக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டபோது, பிளேட்டோவின் வயது 28. சோக்ரடீஸின் மறைவுக்குப் பின், அவரது மாணவர்கள் பிளேட்டோவைத் தேடி வந்து தம் தலைவராக ஏற்றுக்கொண்டனர். ‘சோக்ரடீஸிக்கு மரண தண்டனை அளித்த மக்களாட்சி, ஓர் இழிவான ஆட்சிமுறை’ என வெளிப்படையாகக் குற்றம்சாட்டிய பிளேட்டோவையும் ஆட்சியில் இருந்தவர்கள் கைது செய்ய முயன்றனர். அவர் ஏதென்ஸில் இருந்து வெளியேறி இத்தாலி, சிசிலி, எகிப்து போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையை ஊன்றி கவனித்தார். ஏதென்ஸ் நகரில் ஆட்சி மாற்றம் நடந்த பின்னர் தாய் மண்ணுக்குத் திரும்பினார்.

"செருப்பு அறுந்தால், கதவு பழுதானால், நோய் வந்தால் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் செல்லும் மனிதர்கள், ஆட்சி செய்யும் பொறுப்பை மட்டும் எந்தத் தகுதியும் இல்லாதவரிடம் ஒப்படைப்பது சரிதானா?" என்று கேள்வி கேட்டு, ஆட்சி செய்பவர்களுக்குச் சில தகுதிகளையும் வகுத்தார். "பத்து வயது வரை சுதந்திரமாகவும், அதற்குப் பின் கட்டாயப்படுத்துதல் இன்றி பத்து வருடம்விருப்பமாகக் கல்வி பயின்றும், அதன் பின் தத்துவ ஞானம் அறிய சுற்றுப்பயணம் செய்து மக்கள் வாழ்வை நேரடியாக அறிந்தும்... இப்படியாக ஐம்பது வயது வரை வாழ்வைப் படித்தவனே ஆட்சி செய்யத் தகுதி படைத்தவன். அவன் திருமணம் முடிக்கமாட்டான்; தாழ் போட்டு உறங்கமாட்டான். அவனுக்காக மற்றவர்கள் உழைப்பார்கள்; அவன் மற்றவர்களுக்காக உழைப்பான். அப்படிப்பட்ட சுயநலமற்றவனே தலமைக்குத் தகுதியானவன்" என்றார்.

இருபது வயதுக்குட்பட்ட பெண்களும், முப்பது வயதுக்குட்பட்ட ஆண்களும் திருமணம் முடிக்கக் கூடாது; செல்வம் சேர்ப்பதற்கு உச்ச வரம்பு வேண்டும்; தனிமனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்’ என எத்தனையோ புரட்சிக் கருத்துக்கள் பிளேட்டோவின் நூலில் ஒளிந்திருப்பதால்தான், எமர்ஸன் என்றதத்துவஞானி, "பிளேட்டோவின் ‘குடியரசு’ நூலை மட்டும் வைத்துக்கொண்டு,உலகில் உள்ள மற்ற எல்லா நூல்கைளயும் எரித்துவிடலாம்" என்றார். திருமணமே செய்துகொள்ளாமல் நாடோடியாக வாழ்ந்து, எண்பதாவது வயதில் தூக்கத்திலேயே மரணமெய்திய பிளேட்டோவின் இறுதி ஊர்வலத்தில் ஏதென்ஸ் நகரமே திரண்டுவந்து, பிரியாவிடை கொடுத்தது

உலக ஹெவிவெயிட்-முகமது அலி

உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில், 1964-ம் வருடம், சாம்பியன் லிஸ்டைன எதிர்த்து நின்ற 22 வயது கறுப்பு இளைஞன் முகமது அலியைப் பார்வையாளர்கள் பரிதாபமாகப் பார்த்தார்கள். போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சாதாரணமாகேவ நடந்தன. மூன்றாவது சுற்றில் முகமது அலியின் குத்து, லிஸ்டனின் புருவத்தைப் பதம் பார்த்தது. காயத்துக்கு மருந்து போட்டு வந்த லிஸ்டன் ஆக்ரோஷமாக குத்துக்களை விட்டார். அவரது புருவத்தில...் இருந்த மருந்து தெறித்து, முகமது அலியின் கண்ணுக்குள் விழுந்துவிட, பெரும் உறுத்தலோடு அடுத்த இரண்டு சுற்று சண்டை போட்டார் அலி.

ஆறாவது சுற்றின்போது உறுத்தல் நீங்க, அதிரடி தாக்குதலில் இறங்கினார். அந்தச் சுற்று முடிந்த பின்புதான், தன் கைமூட்டு இடம் பெயர்ந்திருப்பது லிஸ்டனுக்குப் புரிந்தது. அவர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போகவே முகமது அலி உலக சாம்பியன் ஆனார்.

நிருபர்கள், ‘‘இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’’ எனக் கேட்க, உற்சாகமாகப் பேசினார் அலி. ‘‘இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை என்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்னுடைய கோச் மிஸ்டர் ஃபிரட்ஸ் டோனர். அதனால், முதல் இடம் தவிர எதையும் எப்போதும் நான் ஏற்றுக் கொள்வதில்லை’’ என்றார் அலி தன்னம்பிக்கையுடன். ஆம், கலந்துகொண்ட போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்று, இறுதிவரை முதல்வனாகவே திகழ்ந்த முகமது அலிக்கு ஊக்கம் தந்த மந்திரச் சொல் அதுதான்.
அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரத்தில் (1942), ஒரு பியானோ கலைஞரின் மகனாகப் பிறந்தார் முகமது அலி. இயற்பெயர், காஸியஸ் மெர்ஷிலிஸ் கிளைவ்.12-வது வயதில் பாக்ஸிங் கற்றுக் கொள்ளத் துவங்கினார். அவருடையகோச் ஃபிரட்ஸ் டோனர், ‘‘வண்ணத்துப் பூச்சியைப் போல பறந்து, தேனியைப் போல‌த் தாக்கு’’ என்று ஒரு புதிய ஸ்டைலை கற்றுக் கொடுத்தார்.

18-வது வயதில் இத்தாலியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்று,தங்கப்பதக்கத்துடன் தாய்நாடு திரும்பிய காஸியஸ், அந்த சந்தோஷத்தைக் கொண்டாட, நண்பர்களுடன் ஒரு பெரிய ஓட்டலுக்குள் நுழைய, அவரைத் தடுத்து, ‘‘கறுப்பர்களுக்கு இங்கு எதுவும் வழங்குவதில்லை. வெளியே செல்லுங்கள்’’ என்றார் ஓட்டல் மேலாளர்.
‘‘நான், நம் நாட்டுக்காக இத்தாலியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் ஜெயித்திருக்கிறேன்’’ என்று காஸியஸ் சொன்ன பிறகும், மேலாளரிடம் எந்த மாற்றமும் இல்லை. உடனே கடும் ஆத்திரத்தில் தங்கப்பதக்கத்தை ஆற்றில் வீசி எறிந்தார். சொந்த நாட்டில் அந்நியராகக் கேவலப்படுவதாக உணரேவ, இஸ்லாம் மதத்துக்கு மாறி ‘முகமது அலி’ எனப் பெயரை மாற்றிக்கொண்டு, கடுமையாகப் பயிற்சிகள் செய்து, உலக சாம்பியன் பட்டத்தை எட்டிப் பிடித்தார். அதன்பின், அவருக்குப் பல தடைக் கற்கள் வந்தபோதும், சளைக்கவில்லை. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்தார்!

1981-ம் வருடம் அவரை அல்ஸீமர் நோய் கடுமையாகத் தாக்கியது. அதன்பின்னர், கறுப்பர்களின் உரிமைகளுக்காக அரசியலில் ஈடுபட்டதுடன், சமூக சேவையிலும் இறங்கினார். பள்ளி விழாக்களில் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு உற்சாக விதை தூவுவதை மிகவும் விரும்புவார்.

‘‘சூரியனுக்கு ஒரு காரியம் இருக்கிறது; சந்திரனுக்கு ஒரு காரியம் இருக்கிறது; ஏன், மிருகங்களுக்கும்கூட செய்வதற்கு என ஒரு காரியம் இருக்கிறது. அதுபோல் ஒவ்வொரு மனிதனும் தனக்குரிய காரியம் எது என்பதைக் கண்டறிந்து அதில் முழுமையாக ஈடுபட்டு, முதல்வனாக வெற்றி பெற வேண்டும். ஏனென்றால், இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை!’’ என்பதுதான் அவர் தூவிய உற்சாக விதைகளில் முக்கிய விதை!

நெப்போலியன் போனபார்ட் I

நெப்போலியன் போனபார்ட் – பகுதி-1


வரலாற்றின் பக்கங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல.. பல பாடங்களைச் சொல்லிச் செல்பவை.
பல நாட்டு மனித வரலாறுகளைப் படித்தாலும் ஐரோப்பிய வரலாற்றின் மேல் எப்போதும் தீராத ஆர்வம். காரணம் இருந்த வளங்களை அவர்களைப் போல வீணடித்தவர்களும் செம்மையாகப் பயன்படுத்தியவர்களும் அன்றைக்கு மட்டுமல்ல… இன்றைக்கும் யாருமில்லை.
...குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி… இந்தப் புரட்சி மூலம் பிரான்ஸ் மக்கள் சுதந்திரம் பெற்ற விதம், பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பட்ட பாடுகள், எதை எதிர்த்து அவர்கள் போராடினார்களோ, எதிலிருந்து விடுதலை பெற விரும்பினார்களோ அதற்குள்ளேயே மீண்டும் விரும்பிப் போய் மாட்டிக் கொண்டது… இப்படி ஒவ்வொரு நாட்டவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய படிப்பினைகள் ஏராளம்.
இங்கே பிரெஞ்சுப் புரட்சி பற்றி நாம் பாடம் எடுக்கவில்லை. அதன் பிந்தைய விளைவாகத் தோன்றிய நெப்போலியன் சம்பந்தப்பட்ட மாபெரும் வரலாற்று நிகழ்வுகளை மட்டும் முடிந்தவரை எளிமையாக சொல்லவிருக்கிறோம்.
வரலாற்றை ஒரு தொடராகத் தராமல்… அவ்வப்போது சுவாரஸ்யமான நிகழ்வுகளாக மட்டுமே சொல்ல வேண்டும் என்பதே நமது நோக்கம்.
இதை இப்போது எழுதக் காரணம்… தெரிந்தோ தெரியாமலோ நமக்கு நெப்போலியன் பற்றிய பல கதைகள் சொல்லப்பட்டுள்ளன. அந்தக் கதைகளுக்கும் அப்பால் உண்மையான நெப்போலியன் யார்… என்ன அவர் செய்த சாதனை என்பதை மிகையின்றி சொல்ல விரும்பியதன் விளைவு இது. சற்று பெரிய கட்டுரை என்பதால் இரு பகுதிகளாகத் தருகிறோம்.
இனி நெப்போலியன் கதை…
நெப்போலியன் போனபார்ட் I



மத்தியதரைக்கடலில் உள்ள கார்சிகா என்ற சின்ன தீவில் கார்லோ போனபார்ட் – மரியா லெட்டிஸியா ரமாலினோவுக்கும் பிறந்த எட்டுப் பிள்ளைகளில் இரண்டாவது மகன் நெப்போலியன். பிறந்த தேதி 15 ஆகஸ்ட், 1769!
கத்தோலிக்கரான நெப்போலியன் பிறப்பே ராணுவப் பின்னணியில் அமைந்துவிட்டதால் (கார்லோ போனபார்ட்தான் பிரெஞ்சு மன்னன் 16-ம் லூயியின் பிரதிநிதி- கார்சிகா தீவுக்கு). தாயின் ஒழுக்கமான வளர்ப்பில் வளர்ந்த நெப்போலியனுக்கு, அந்த வாழ்க்கை முறையே பின்னர் வெற்றிகரமான ராணுவ வீரனாகத் திகழ உதவியது.
மேற்படிப்புக்காக, 1779-ல் கார்சிகா தீவிலிருந்து பிரான்சுக்கு வந்த நெப்போலியன் பிரையன் – லெ-சாடெ ராணுவப் பள்ளியில் சேர்கிறார்.
ராணுவப் பள்ளியில் கணக்கில் புலியாகத் திகழ்ந்த நெப்போலியன், வரலாறு – புவியியலில் மிகச் சிறந்த மாணவராகத் திகழ, அவரது ஆச்ரியர் இப்படிச் சொல்கிறார்: ‘இந்த மாணவன் மிகச் சிறந்த மாலுமியாக வருவான்’.
ஆனால் நெப்போலியன் மாலுமியாகவில்லை. மிகச் சிறந்த தரைப்படை வீரனுக்கான பயிற்சிகளைப் பெற்று முடித்தார். தந்தை இறந்ததால், வருமானம் இல்லாமல், இரண்டு ஆண்டு கல்வியை ஒரே ஆண்டில் கற்று முடித்தார் நெப்போலியன் என்கிறது அவரே எழுதி வைத்த வரலாற்றுக் குறிப்பு.
1785-ல் நெப்போலியன் இரண்டாம் நிலை லெப்டினென்டாக பதவி ஏற்றார். பிரெஞ்சுப் புரட்சி வெடித்த 1789-ம் ஆண்டுவரை பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் அந்தப் பதவியில் பணியாற்றினார். பின்னர் இரண்டாண்டுகள் லீவெடுத்துக் கொண்டு சொந்தத் தீவுக்குப் போய் அங்கு புரட்சியாளர்களுக்கு ஆதரவாக பிரெஞ்சு நராணுவத்தையே எதிர்த்துப் போராடினார். பின்னர் பாரிஸ் திரும்பினார். ராணுவ அதிகாரிகளை எப்படியோ சமாளித்து 1792-ல் கேப்டனாகப் பதவி உயர்வு பெற்று மீண்டும் கார்ஸிகா வந்தார்.
அப்போதுதான் அவருக்கும் கார்ஸிகாவின் தலைவர் பாஸ்கல் பாலிக்கும் இடையே மோதல் வலுக்க, குடும்பத்துடன் கார்ஸிகாவை விட்டே வெளியேற வேண்டிய சூழல் நெப்போலியனுக்கு. இது நடந்தது ஜூன் 1793 (வரலாறு முக்கியம்!).
புரட்சிக்காரர்களாகிய ரோபஸ்பியர் சகோதரர்களின் நட்பு கிடைத்தது நெப்போலியனுக்கு. இன்னொரு பக்கம், தனது தீவைச் சேர்ந்த வீரர் ஒருவரின் துணையுடன் டுலன் நகர குடியரசுப் படைகளின் கமாண்டராக நியமிக்கப்பட்டார் நெப்போலியன். அந்த நகரம் பிரிட்டிஷ் படைகளின் பிடிக்குள் வந்தபோது, அவர்களை வெற்றிகரமாக விரட்டியடித்து பிரிகேடியர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார்.
ஆனால் 1794-ல் நெப்போலியன் கைது செய்யப்பட்டார். காரணம் புரட்சிக்காரர்களுடன் அவருக்கிருந்த தொடர்புகள் என்று விளக்கமளிக்கப்பட்டாலும், அடுத்த 10 நாட்களில் ரிலீஸாகிவிட்டார்.
வென்டீ எனும் பகுதியில் நடந்த புரட்சிக்கு எதிரான படைக்கு அவரை கமாண்டராக நியமித்தார்கள். ஆனால் ஆர்டிலரி ஜெனரலாக இருந்த நெப்போலியனுக்கு அது பதவியிறக்கமே. எனவே உடல்நிலையைக் காரணம் காட்டி அந்தப் பணியை செய்ய மறுத்தார். எனவே துருக்கியின் கான்ஸ்டான்டிநோபிளுக்கு தூக்கியடிக்கப்பட்டார். அங்கு சுல்தானின் படையில் பணியாற்ற அனுப்பப்பட்டார்.
அவரும் அந்தக் கால கட்டத்தில் துருக்கிக்குப் போய், ஒரு சூப்பர் ரொமான்டிக் நாவலை எழுதி முடித்துள்ளார்! ஒரு போர்வீரனுக்கும் அவனது காதலிக்குமான உறவைச் சொல்லும் கதை அது. அதில் இடம்பெற்ற பெரும்பாலான சம்பவங்கள் நெப்போலியனுக்கு அவரது காதலிக்குமிடையே நடந்தவற்றின் தொகுப்பாகவே இருந்ததாம்.
ஆனால் இந்தப் பணி முடிந்து பாரிஸ் திரும்பிய நெப்போலியனை, முன்பு வென்டீ பணி மறுத்த காரணத்தால் பதவி நீக்கம் செய்தது அரசு. நெருக்கடிக்குள்ளானார் நெப்போலியன்.
ஆனால் அதே ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி மீண்டும் நெப்போலியனின் தயவை நாடியது புரட்சி நிர்வாகம் (டைரக்டர்ஸ் குழு), பால் பேரஸ் என்பவர் மூலம். இந்த முறை பாரிஸ் தெருக்களில் புரட்சிப் படைகளுக்கும் அரசப் படைகளுக்குமான உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பெரும் பொறுப்பு நெப்போலியனுக்கு தரப்பட்டது. அவரும் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்தி அக்டோபர் 5-ம் தேதி, பாரிஸ் தெருக்களில் ரத்த ஆறு ஓட, உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். 1400 அரச படையினர் கொல்லப்பட, எஞ்சியோர் ஓடிவிட்டனர்.
சாதாரண போர் வீரராக இருந்த நெப்போலியன் படிப்படியாக பிரஞ்சு நிர்வாகத்தின் கவனத்துக்குரியவராக மாறினார். பிரஞ்சுப் படைகளின் தளபதியானார்.
செல்வம் குவிந்தது. இந்தப் பொறுப்பை தனக்கு வாங்கிக் கொடுத்த பால் பேரஸ் மனைவி ஜோஸப்பினையே பின்னர் திருமணம் செய்து கொண்டார் நெப்போலியன் (ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் நெப்போலியனுக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது. ஜோஸப்பினைப் பார்த்ததும் அந்த நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டார் மனிதர். அந்த நேரம் பார்த்து ஜோஸப்பின் கணவரும் போரில் கொல்லப்பட்டுவிட, திருமணத்துக்கு எந்தத் தடையுமில்லாமல் போனது!)
1796-ம் ஆண்டு கல்யாணமான இரண்டாம் நாள், இத்தாலியப் படையெடுப்புக்கு தலைமை தாங்கிச் சென்றார் நெப்போலியன்.
லோடி எனும் இடத்தில் நடந்த போரில் ஆஸ்திரியப் படைகளை லம்பார்டி பகுதிக்கு அப்பால் விரட்டியடித்தார். பின்னர் ரோம் வரை முன்னேறி போப்பின் அதிகாரத்தையும் ஆட்டம் காண வைத்தார். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இத்தாலியையும் பிரான்ஸின் மேலாதிக்கத்தை ஏற்க வைத்தார் நெப்போலியன். அதுமட்டுமல்ல… 1100 ஆண்டுகள் சுதந்திர நாடாகத் திகழ்ந்த ஆஸ்திரியாவின் மீது படையெடுத்து அதன் தலைநகர் வியன்னாவை 1797-ல் வீழ்த்தி, பிரான்சின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்தார். பிரான்சின் சார்பாக போர் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் அவர் கைக்கு வந்தது… அது மட்டுமா.. வென்ற நாடுகளின் செல்வங்களை அடியோடு எடுத்துக் கொள்ளும் (கொள்ளையிடும்?) அதிகாரமும் நெப்போலியன் வசம்.
நெப்போலியன் போரிடும் ஸ்டைலே அலாதியானது. அவர் பழமையான போர் முறைகளை அடியோடு உடைத்தார். போரில் பெரும்பாலும் நெப்போலியன் நடுவில் நின்று தாக்க, அவருக்கு துணையாக இரு புறத்திலும் படைகள் திரண்டு வந்து தாக்கும்… எதிரிப் படை நிலைகுலைந்து போகும். இந்த டெக்னிக்கை, எதிரணியின் போக்குக்கேற்ப திடீர் திடீரென்று மாற்றிக் கொள்ளவும் செய்தார் நெப்போலியன். இன்னொன்றகு, எதிரி எந்தப் பகுதியில் வீக்காக இருக்கிறானோ அந்த இடத்துக்கு சடாலென போய் தாக்குவது இவரது பாணி. எப்படி போய் தாக்கவேண்டும், எந்த நேரம் என்றெல்லாம் பார்க்கக் கூடாது… நினைத்த மாத்திரத்தில் வேகமாகப் பாய்ந்து சென்று எதிரியை நிலைகுலைய வைத்தாலே போதும்… மற்றதை அவர் பார்த்துக் கொள்வார். இந்த டெக்னிக் கடைசி வரை அவருக்குக் கைக் கொடுத்தது.
இத்தாலிப் போரில் 150000 வீரர்களைச் சிறப்பிடித்த நெப்போலியன், ஏராளமான பீரங்கிகள் மற்றும் படையணிகளை கட்டி இழுத்து வந்தார்.
நெப்போலியன் செல்வாக்கு ஓஹோவென்று உயர்ந்தது. சொந்தமாக மூன்று செய்தித்தாள்களை நடத்தினார் அவர். இன்னொரு பக்கம் பிரான்ஸ் தேர்தல்களில் அரச விசுவாசிகளின் கை ஓங்கியது. இத்தாலியையும் ஆஸ்திரியாவையும் நெப்போலியன் கொள்ளையடித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்ட, நெப்போலியன் பாரிஸுக்குப் போகாமலேயே, தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு புரட்சியை அரங்கேற்றி அரச விசுவாசிகளை தூக்கினார். மீண்டும் அதிகாரம் நெப்போலியனுக்கு வேண்டப்பட்ட இயக்குநர்கள் கைகளுக்கு வந்தது.
இப்போது முன்னிலும் பல மடங்கு பாப்புலர் ஹீரோவாக பாரிசுக்குத் திரும்பினார் நெப்போலியன்.
அரசு நிர்வாகத்தை ஆளும் இயக்குநர்களை விட நெப்போலியனுக்கு கூடுதல் மரியாதை.. செல்வாக்கு!
இதை பிரான்ஸின் ஆட்சியாளர்களான இயக்குநர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த நேரம் பார்த்து எகிப்துக்குப் படையெடுத்துச் செல்ல நெப்போலியன் விருப்பம் தெரிவித்தார். அப்படியே, சூயஸ் கால்வாய் வழியாக ஒரு 15000 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்பி, திப்பு சுல்தான் உதவியோடு பிரிட்டிஷ்காரர்களை விரட்டிவிட்டு, இந்தியாவில் பிரான்ஸின் வியாபார சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்றும் விரும்பினார்.
ஆனால் அவ்வளவு பெரிய படையை இந்தியாவுக்கு ஆகும் செலவு கட்டுப்படியாகுமா என ஆலோசகர்கள் யோசிக்க, ‘அட முதலில் அந்தாளை பாரிசிலிருந்து பக்குவமாக அனுப்பி வெச்சுடுங்க… போய் மெல்ல வரட்டும்’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டனராம் ஆட்சியிலிருந்த இயக்குநர்கள்.
நெப்போலியனின் எகிப்து பயணம் துவங்கியது.

எகிப்தில் நெப்போலியன்...
இரண்டுமாதங்கள் பக்காவாக திட்டமிடப்பட்ட போர் அது. எகிப்து – சூயஸ் கால்வாய் பகுதிதான் மத்திய கிழக்கு நாடுகளின் நுழைவாயிலாகத் திகழ்ந்தது அன்றைக்கு. குறிப்பாக பிரிட்டிஷ்காரர்களுக்கு. அந்த வழியை அடைத்துவிட்டால்… அல்லது கையகப்படுத்திவிட்டால், பிரிட்டனின் வர்த்தக சாம்ராஜ்யத்துக்கு ஒரு செக் வைத்த மாதிரியும் இருக்கும், இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும் என்பது நெப்போலியன் திட்டம்.
1798-ல் மால்டாவை அடைந்த நெப்போலியன், ஜஸ்ட் மூன்றே வீரர்களை இழந்து எகிப்தின் முக்கியத் துறைமுகத்தைப் பிடித்தார் நெப்போலியன். அடுத்த வாரத்தில் அலெக்ஸாண்ட்ரியாவை வீழ்த்தினார். அடுத்து ஒரு வாரம் நடந்த ‘பிரமிடு போரில்’ 300 பிரெஞ்சு வீரர்களை இழந்த நெப்போலியன், 6000 மாம்லுக் வீரர்களை வீழ்த்திவிட்டார்.
இருந்தாலும் இதை பெரிய வெற்றியாகக் கொண்டாட முடியவில்லை அவரால். காரணம் பிரிட்டிஷ் கப்பல் படை தளபதி நெல்சன். நெப்போலியனின் கப்பல் படையையே பெருமளவு நாசம் செய்துவிட்டார் அவர். மத்தியதரைக் கடலில் பிரான்ஸின் கடல் ஆதிக்கத்தை நிலை நாட்டும் நெப்போலியன் முயற்சி தோற்றுப் போனது என்றே வரலாறு பதிவு செய்துள்ளது.
இந்தத் தோல்வியிலிருந்து தப்பிக்க, ஆட்டோமான் துருக்கியர் வசமிருந்த சிரியா, கலிலே பகுதிக்கு தனது 13000 படையினருடன் சென்றார். அங்கே அரீஷ், காஸா, ஜாஃபா, ஹெய்ஃபா போன்ற கடலோர நகரங்களைக் கைப்பற்ற கடும் போரில் இறங்கினார். ஏராளமானவர்களைக் கொன்று ரத்தக் குளியல் நடத்தியது நெப்போலியன் படை. குறிப்பாக ஜாஃபாவில் நிகழ்ந்தது கொடூரத்தின் உச்சம்.

ஜாஃபாவில்...
இங்கே பிரெஞ்சுப் படையை எதிர்த்துப் போரிட்டவர்கள் கைதிகளாக இருந்து படையில் சேர்க்கப்பட்டவர்கள். மொத்தம் 1400 பேர். இவர்களை துப்பாக்கியின் முனையில் இருந்த கத்தியால் குத்தியே கொன்றுவிட்டதாம் நெப்போலியன் படை. சுட்டால் குண்டு வீணாகிவிடுமே என்பதால் இந்த குரூரமாம். இவர்களைத் தவிர இந்தப் பகுதியில் இருந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்களையும் விட்டு வைக்காமல் மூன்று நாட்கள் தொடர்ந்து கொன்றழித்தார்களாம் பிரெஞ்சுப் படையினர்.
இந்த கொடூரக் கொலையே பின்னர் பிளேக் நோய் பரவ காரணமாக, அது எங்கே தம் படையைத் தொற்றிக் கொள்ளுமோ என்று பின்வாங்கி மீண்டும் எகிப்துக்கு வந்துவிட்டார் நெப்போலியன்.
அதேநேரம் பிரான்ஸில் அவரது செய்தித் தாள்களும் உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்படாமல், பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
பிரான்ஸுக்கு திரும்ப நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் நெப்போலியன். அங்கே பிரான்ஸ் படைகள் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தன.
தனக்கு பதில் கெப்ளர் என்பவரை பிரெஞ்சுப் படைகளுக்குப் பொறுப்பாக நியமித்துவிட்டு பிரான்ஸ் திரும்பினார் நெப்போலியன், 1799, அக்டோபர் மாதம். அப்போது கிட்டத்தட்ட நாடு திவாலாகியிருந்தது. அரசின் இயக்குநர்கள் செல்லாக் காசுகளாக பார்க்கப்பட்டனர். மக்களிடம் அவர்களுக்கு இம்மியளவு கூட மதிப்பில்லை.
இந்த சூழலை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார் நெப்போலியன். அதே நேரம் இயக்குநர்களோ தங்களுக்கு பெரும் சவாலாகத் திகழும் நெப்போலியனை எப்படி தூக்கியெறிவது என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் இயக்குநர் குழுவில் இருந்த தனக்கு வேண்டப்பட்டவர் மூலம் இன்னொரு புரட்சியை அரங்கேற்றினார் நெப்போலியன்.
9 நவம்பர் 1799-ல் இயக்குநர் குழுவைக் கலைத்துவிட்டு புதிய கான்சல் அமைப்பைத் தோற்றுவித்த நெப்போலியன், தன்னை முதன்மை கான்சலாக அறிவித்தார். அதற்கேற்ப புதிய அரசியல் அமைப்பு சட்டம் ஒன்றையும் தோற்றுவித்தார்.
பிரான்ஸின் ஆட்சியாளராக நெப்போலியன் பதவியேற்ற நேரம், மீண்டும் படு வீக்காக இருந்தது பிரான்ஸ் நாடு. இத்தாலி அதன் கட்டுப்பாட்டிலிருந்து விலகி மீண்டும் வாலாட்ட, தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திலிருந்து நெப்போலியன் தனது பெரும்படையுடன் ஆல்ப்ஸைக் கடந்து இத்தாலிக்குள் பிரவேசித்தார். ஆரம்பத்தில் சில சறுக்கல்கள் நேர்ந்தாலும், 1801-ம் ஆண்டு லுனவில்லே உடன்பாடு மூலம் வெற்றிகரமாக இத்தாலியை தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.

இத்தாலியப் போருக்காக ஆல்ப்ஸ் மலையைக் கடக்கும் நெப்போலியன்
அடுத்த நான்கு ஆண்டுகளில் பிரான்ஸின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்டார் நெப்போலியன். மன்னராட்சிக்கு எதிராக பெரும் புரட்சி செய்து, குடியரசாட்சியை கொண்டு வந்த அதே நெப்போலியன் போனபார்ட், மீண்டும் மன்னராட்சியை ஏற்படுத்தினார் பிரான்ஸில்!
தொடர்ந்து பல போர்களில் வென்ற நெப்போலியன், ஒரு கட்டத்தில் போர்ச்சுகல், பிரிட்டன், ஸ்கான்டிநேவியா நீங்கலாக மொத்த ஐரோப்பாவையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்திருந்தார். ரஷ்ய மன்னர் ஜார் அலெக்சாண்டருடன் டில்ஸிட் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, ஐரோப்பாவை இரு பகுதியாகப் பிரித்தார். தான் வென்ற நாடுகள் முழுவதிலும் தனது அண்ணன், தம்பிகள், நண்பர்களை ஆட்சியாளர்களாக நியமித்துக் கொண்டார்.
மொத்த ஐரோப்பாவும் தன் கைவசம் வந்ததால், பிரிட்டனுக்கு எதிராக பொருளாதாரத் தடையையும் கொண்டு வந்தார்… ஆனால் அது சரியான பலனைத் தரவில்லை.
இந்த நேரத்தில்தான் நெப்போலியன், தேவையில்லாத தீபகற்பப் போரில் இறங்கி… தனது ‘வாட்டர்லூ’வைச் சந்தித்தார்…





நெப்போலியனிடம் கோபித்துக் கொண்ட பீத்தோவன்! – பகுதி-II

ஒரே ஆண்டில் நெப்போலியன் செய்த நிர்வாகப் புரட்சி! – பகுதி 2
வெற்றி மேல் வெற்றி பெற்று, பிரான்ஸின் பேரரசனாக தன்னை அறிவித்துக் கொண்ட நெப்போலியனுக்கு பெரும் உறுத்தலாக இருந்தது பிரிட்டன்தான். கடற்படையில் அத்தனை பெரிய பலசாலிகளாக திகழ்ந்தார்கள் பிரிட்டிஷார். தரைப்படை நடத்துவதில் தன்னிகரற்றுத் திகழ்ந்த நெப்போலியனுக்கு, இந்த கடற்படைதான் தண்ணி கா...ட்டியது என்றால் மிகையல்ல.

பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் போனபார்ட்-1
1801-ம் ஆண்டு பிரிட்டன் மீது படையெடுத்து அந்த நாட்டையே உருத்தெரியாமல் அழித்துவிட வேண்டும் எனும் அளவுக்கு கடும் கோபம் கொண்டிருந்தார் நெப்போலியன். தனது தளபதிகளிடம், ‘பிரிட்டன் என்றொரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை’ என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று கமெண்ட் அடித்தார் என்றால் அவரது பிரிட்டிஷ் வெறுப்பு புரிந்திருக்கும்.
அவரது மனம் இந்த அளவு வெறுத்தாலும், உண்மையில் பிரிட்டனை தோற்கடிப்பது அத்தனை சுலமாக இல்லை. பொருளாதார ரீதியாகவும் நொடித்துப் போயிருந்தது நாடு. இந்த காலகட்டத்தில்தான் தனது ஆதிக்கத்திலிருந்த வட அமெரிக்காவின் பெரும்பகுதியை ஏக்கர் வெறும் 3 சென்ட்டுக்கு விற்று சமாளித்தார் நெப்போலியன். அதாவது ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பை வெறும் ரூ 400 க்கும் குறைவாக (7.4 டாலர்) விற்றுள்ளார்!!
ஒரே ஆண்டில் நிர்வாகத்தைப் புரட்டிப் போட்ட நெப்போலியன்!
பிரிட்டன் பக்கமும் இதே நெருக்கடிதான் கிட்டத்தட்ட. எனவே அந்த நேரத்தில் ஒரு தற்காலிக ஒப்பந்தம் போட்டார் பிரிட்டனுடன். பிரான்ஸின் அமியன்ஸ் எனும் இடத்தில் கையெழுத்தானது அந்த அமைதி ஒப்பந்தம், 1801 மார்ச் 25-ல். ஆனால் அதுவும் அற்பாயுளில் முறிந்தது. 1802-ம் ஆண்டே மீண்டும் போர்மேகங்கள் கவியத் தொடங்கின.

நெப்போலியன் வெளியிட்ட நாணயங்கள்
1789 முதல் 1815-ம் ஆண்டு வரை நடந்த பிரெஞ்சு யுத்தம் என்ற சரித்திரப் புகழ் வாய்ந்த போர்க்காலத்தில் ஐரோப்பா அமைதியாக இருந்தது இந்த ஒரு ஆண்டு மட்டுமே.
ஆனால் இந்த ஒரே ஆண்டில் அவர் செய்த சீர்திருத்தங்கள் பிரமிப்பூட்டுபவை. இன்றுவரை நெப்போலியன் அறிமுகப்படுத்திய திட்டங்கள், அரசியல் சட்டங்களே பிரான்ஸில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸுக்கென சிவில் கோடு, ராணுவச் சட்டம், சாலை – பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட சிறப்பான உள்கட்டமைப்பு வசதி,
நாட்டின் சிறந்த குடிமகன்கள், வீரர்கள், கலைஞர்களை கவுரவிக்கும் விருதுகளை 1802-ம் ஆண்டு நெப்போலியன் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்றுதான் செவாலியே விருது!
குற்றவாளிகளைத் தண்டிப்பதில் இன்றும் பிரான்ஸில் நடைமுறையில் உள்ளது நெப்போலியன் சட்டம்தான் (Code of Napoleon).
பொருளாதார நிர்வாகத்தை அத்தனை சிறப்பானதாக, ஒரு திட்டமிட்ட அமைப்பாக மாற்றியவரும் நெப்போலியனே. பிரான்ஸ் மத்திய வங்கி, புதிய நாணய முறை, ஒருமுகப்படுத்தப்பட்ட நிர்வாக முறை என எல்லோரும் வியந்து பார்க்கும் புதிய முறைகளை, எந்த நாட்டு பாதிப்பும் இன்றி நெப்போலியன் உருவாக்கியது இன்றும் சரித்திர ஆய்வாளர்களால் வியந்து பார்க்கப்படுகிறது.
ஆனால் நெப்போலியனை மிகச் சிறந்த நிர்வாகியாகத் தொடர்ந்து இருக்க விடவில்லை பிரிட்டன். 1803-ம் ஆண்டு மீண்டும் பிரான்ஸ் மீதான போரை அறிவித்தது பிரிட்டன்.
இதற்கிடையில் நெப்போலியன் தனக்கு பேரரசனாக முடிசூட்டிக் கொள்ள முடிவெடுத்து, அந்த வைபவத்தை நிறைவேற்ற போப் ஆண்டவரை வரவழைத்தார் (முந்தைய பகுதியில் இதை விரிவாகச் சொல்லவில்லை).
1804-ம் ஆண்டு, டிசம்பர் 2-ம் தேதி போப் ஆண்டவர் தனது கையில் பேரரசனுக்கான கிரீடத்தை வைத்துக் கொண்டு நிற்கிறார். ஆனால் அவர் கிரீடத்தை கடைசி நேரத்தில் சூட்டாமல் சதி பண்ணி விடுவாரோ என்ற சந்தேகம் நெப்போலியனுக்கு. பார்த்தார்… சட்டென்று அதை போப் கையிலிருந்து பிடுங்கி தானே சூட்டிக் கொண்டார்!
மனைவி ஜோஸப்பினை பேரரசியாக அறிவித்தார்.

போப்பிடமிருந்து கிரீடத்தை எடுத்துக் கொள்ளும் நெப்போலியன்...
பீத்தோவனின் கோபம்…
பின்னர் 1805-ம் ஆண்டு தனது ஆதிக்கத்திலிருந்த இத்தாலிக்கு ஒரு விஸிட் அடித்து, அங்கும் பேரரசனாக மிலன் தேவாலயத்தில் முடிசூட்டிக் கொண்டார். அப்போது 18 மார்ஷல்களை அறிவித்தார் நெப்போலியன். ஒருவர் செய்த பெரும் சாதனைகளுக்காக மன்னர்களால் அளிக்கப்படும் பெரும் கவுரவம் இந்தப் பதவி.
இதில்தான் நெப்போலியன் மீது பெரும் மனவருத்தம் கொண்டார் இசை மேதை பீத்தோவன். காதுகேளாத நிலையிலும் 9 சிம்பனிகளை அமைத்து சாதனை புரிந்தாரே, அதே பீத்தோவன்தான்.
நெப்போலியன் மக்களாட்சியின் காவலனாக இருப்பார் என்று எதிர்பார்த்து அவரை தீவிரமாக ஆதரித்து வந்தவர் பீத்தோவன். ஆனால் மன்னராட்சியின் நீட்சியாக வந்து பதவிப் பிச்சை போடுபவராக நெப்போலியன் மாறியது பிடிக்காமல் போனது. அப்போது பீத்தோவன் தனது 3 வது சிம்பனியை அமைத்துக் கொண்டிருந்ததாக வரலாறு கூறுகிறது.

உல்ம் போர் முனையில்...

மீண்டும் போர்க்களத்தில் நெப்போலியன்!
உள்நாட்டுச் சீர்திருத்தங்கள், தனது ஆளுகைக்குட்பட்ட நாடுகளிலும் தன்னை பேரரசனாக நிலைநிறுத்துதல் என நெப்போலியன் பிஸியாக இருந்த நேரத்தில், பிரிட்டன் குழிபறிப்பு வேலையில் தீவிரமாக இறங்கியது.
நெப்போலியனின் கட்டாயக் கூட்டாளிகளான ஆஸ்திரியா மற்றும் ரஷ்யாவின் மனதைக் கரைத்த பிரிட்டன், நெப்போலியனுக்கு எதிராக போர் அறிவிப்பு செய்தது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மேற்கில் ஆங்கிலக் கால்வாய் வழியாக தனது ஸ்பெயின் – பிரெஞ்சு கூட்டு கடற்படையைக் கொண்டு பிரிட்டனுக்குள் ஊடுருவலாம் என நெப்போலியன் திட்டமிட்டார். ஆனால் அதனை முறியடித்துவிட்டது பிரிட்டன்.
அதேநேரம் கிழக்கு முனையில், ரஷ்யாவின் துணையுடன் பிரான்ஸை ஊடுருவ ஆஸ்திரியா முயன்றதை அறிந்த நெப்போலியன், தன் படையை உல்ம் பகுதிக்கு திரும்புமாறு ரகசிய உத்தரவிட்டார். ரஷ்யப் படைகள் ஆஸ்திரியாவுடன் கைகோர்ப்பதற்குள் வேகமாக குறுக்கே புகுந்த பிரெஞ்சுப் படைகள் ‘ஆஸ்ட்ரலிட்ஸ்’ எனும் இடத்தில் ஆஸ்திரியப் படையைச் சிதறடித்து ஆயிரக்கணக்கான வீரர்களைச் சிறைப்பிடித்தனர்.
பிரிட்டனுடன் கடற்போரில் தோற்றாலும், இன்னொரு எதிரியை புரட்டியெடுத்த திருப்தி நெப்போலியனுக்கு. அந்த திருப்தியுடன், தான் பேரரசனானதன் முதலாண்டு நிறைவைக் கொண்டாடினார் 1805-ம் ஆண்டு!
1806- 1807-ல் ரஷ்யப் படைகளுக்கு எதிராக போலந்தில் தொடர் வெற்றிகளைப் பெற்ற நெப்போலியனுடன் வேறு வழியின்றி டில்சிட் ஒப்பந்தம் போட்டுக் கொண்டது ரஷ்யா.
1807-ம் ஆண்டு ஐரோப்பாவையே இரு பிரிவாகப் பிரித்தார் நெப்போலியன். அன்றைய பிரஸ்யா வரையிலான (ஜெர்மனி) பகுதி முழுக்க நெப்போலியன் வசம் வந்தது. அந்தப் பிரதேசத்திலிருந்த நாடுகளிலெல்லாம் தனது நண்பர்களையும் உறவினர்களையும் நியமித்தார் நெப்போலியன்.

நெப்போலியனின் ஐரோப்பா இது!
பிரிட்டனுக்கு எதிரான பொருளாதாரத் தடை!
கிட்டத்தட்ட ஐரோப்பாவே தனது பிடிக்குள் வந்துவிட்டதை உணர்ந்த நெப்போலியன் உனடியாக இதனை பிரிட்டனுக்கு எதிராகப் பயன்படுத்த திட்டமிட்டார். பொருளாதாரத் தடையை அறிவித்தார், கான்டினென்டல் சிஸ்டம் எனும் பெயரில். பிரிட்டனுடன் எந்த நாடும் வர்த்தக உறவு, பொருள்களை இறக்குமதி – ஏற்றுமதி செய்யக்கூடாது, பிரிட்டிஷ் கப்பல்களைப் புறக்கணித்தல் போன்றவை இந்த தடைக்குள் அடங்கும்.
ஆனால் நெப்போலியன் எதிர்பார்த்த மாதிரி இது அத்தனை வெற்றிகரமாக நிறைவேறுவதாகத் தெரியவில்லை. காரணம் கடலில் பிரிட்டன் அசைக்க முடியாத சக்தி. எனவே திருட்டுத்தனமாக பிரிட்டனுடன் வர்த்தக உறவைத் தொடர்ந்தனர் நெப்போலியன் கட்டுப்பாட்டிலிருந்த நாட்டினர்.
குறிப்பாக போர்ச்சுக்கல், நெப்போலியனின் ஆணையை அப்பட்டமாக மீறியது. கடும் கோபம் கொண்ட நெப்போலியன் ஸ்பெயின மற்றும் போர்ச்சுக்கள் நாடுகளை ஆக்கிரமித்தார். தனது படையில் மிகத் தேர்ந்த, திறமை வாய்ந்த 3 லட்சம் வீரர்களை இதில் ஈடுபடுத்திவிட்டு இவர் பிரான்ஸ் திரும்ப, பிரிட்டன் – போர்ச்சுக்கள் மற்றும் ஸ்பெயின் கொரில்லாப் படை ஒன்று சேர்ந்து நெப்போலியன் படையை சிதறடித்தன. இதனை தீபகற்பப் போர் என்கிறது சரித்திரம். இதில் நெப்போலியனுக்கு பெரும் இழப்பு, ராணுவ-பொருளாதார ரீதியாக.
இதுதான் மிகப்பெரிய அடியாக விழுந்தது நெப்போலியனுக்கு. “வாழ்க்கையில் நான் செய்த பெரும் தவறு இந்த தீபகற்பப் போர்கள்தான்” என்று பின்னர் ஒருமுறை அவரே கூறியுள்ளார்.
போப் பட்ட பாடு!
1809-ம் ஆண்டு மீண்டும் ஒரு பெரும் போருக்கு தயாராகின பிரெஞ்சுப் படைகள். இம்முறையும் பிரிட்டன்தான் ஆஸ்திரியாவை நெப்போலியனுக்கு எதிராகத் தூண்டிவிட்டது.
அந்த நேரத்தில் போப் ஆண்டவர் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகள் நெப்போலியனின் பொருளாதாரத் தடையை ஏற்க மறுத்தன. எனவே அந்த நாடுகளையெல்லாம் பிரெஞ்சு சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார் நெப்போலியன். ஒரு சிறிய படைப்பிரிவு ரோமிலிருந்து போப் ஆண்டவரையே கடத்திச் சென்றுவிட்டது. ஆனால் இப்படிச் செய்யும்படி நெப்போலியன் சொல்லவில்லை. எனவே போப் விடுதலை குறித்தும் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. 1814-ம் ஆண்டு வரை போப் ஆண்டவரால் வாடிகனுக்கு திரும்ப முடியவில்லை!
இதற்கிடையே, நெப்போலியன் மனைவி ஜோஸப்பின் விவாகரத்து பெற்றுவிட, 1910-ல் மேரி லூசி என்ற ஆஸ்திரிய இளவரசியை திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்துக்கு வராமல்போன கார்டினல்களுக்கெல்லாம் நெப்போலியன் தண்டனை கொடுத்தது தனிக் கதை!

ஹிட்லரின் இளமைக்காலம்


ஹிட்லரின் இளமைக்காலம்
இரண்டாம் உலகப்போர் மூள்வதற்கும் அதன் மூலம் 20 கோடி பேருக்கு மேல் மரணமடைவதற்கும் காரணமாக இருந்த ஜேர்மனிய சர்வதிகாரி ஹிட்லரின் வாழ்க்கை பல திருப்பங்களும் திடுக்கிடும் சம்பவங்களும் நிறைந்ததாகும்.

வட ஆஸ்திரியாவில்(Braunau am Inn) உள்ள பிரானோ என்ற ஊரில் 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பிறந்தார்.இவருடைய தந்தையின் பெயர் அலாயிஸ் சிக்கில் கிராப்பர் ஹிட்லர்(Alois Hitler... ).இவர் சுங்க திணைக்களத்தின் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அவரின் மூன்றாவது மனைவியின் நான்காவது மகன் ஹிட்லர். பிறந்தது முதலே ஹிட்லர் நோயுற்றவராக இருந்தார்.அடிக்கடி காய்ச்சல் வரும். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தான் உடம்பு தேறியது.
ஹிட்லருக்கு தாயிடம் செல்லம் அதிகம்.தாய் மீது மிகுந்த பக்தியும் பாசமும் கொண்டவர்.பாடசாலையில் படிக்கும் போது ஹிட்லர் தான் வகுப்பின் முதல் மாணவன். பிறகு அவருக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தது.படம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.விரைவிலே அழகான ஓவியங்கள் வரையும் ஆற்றலை பெற்றார்.மாணவப்பருவத்திலேயே நிறைய நாவல்கள் படித்தார். போர்கள் பற்றிய கதைகள் என்றால் நாட்டம் அதிகம்.
1903 இல் ஹிட்லரின் தந்தை இறந்தார். தந்தையின் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்த ஹிட்லர் நாளுக்கு நாள் முரடனாக மாறினான் . மாணவர்,ஆசிரியருடன் சண்டை பிடிப்பார்.தனது 17 ஆவது வயதில் கல்லூரி இறுதி தேர்வில் தேறினார் ஹிட்லர்.அதற்காக கொடுத்த சான்றிதழை வாங்கிக்கொண்டு வரும் வழியில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தினார்.சான்றிதழையும் கிழித்து எறிந்தார்.
1907 ஆம் ஆண்டில் ஓவியக்கல்லூரியில் சேர முயன்றார்,அதில் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.அந்த ஆண்டின் இறுதியில் ஹிட்லரின் தாயார் இறந்துபோனார்.அதன் பின்பு ஓவியங்களை தயாரித்து வாழ்க்கை நடத்தினார்.இரவில் கூட மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கூட ஓவியங்களை வரைவார்.இவர் வரைந்த ஓவியங்கள் நல்ல விலைக்கு விற்பனையாகின.அதனால் சொந்தமாக ஓவியக்கூடம் அமைத்தார்.இச் சமயத்தில் சிந்தியா என்ற பெண்ணை ஹிட்லர் காதலித்தார்.காதல் தோல்வியடையவே இராணுவத்தில் சேர்ந்தார்.முதலாம் உலகப்போரின் போது ஜேர்மனி இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.
ஹிட்லரின் இராணுவப் பிரவேசமும், வெற்றியும்1918 இல் ஜேர்மனி தோற்றது.இத் தோல்விக்கு ஜனநாயகவாதிகளும் யூதர்களும் தான் காரணம் என்று ஹிடலர் நினைத்தார்.உலகில் ஜெர்மானியரே உயர்ந்த இனத்தவர்.உலகம் முழுவதையும் ஜேர்மனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என விரும்பினார்.ஹிட்லர் பேச்சு வல்லமை மிக்கவர்.தேசிய சோசலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் ஒரு உறுப்பினராக சேர்ந்து தனது பேச்சு வல்லமையால் விரைவிலே கட்சித் தலைவரானார்.
அரசாங்கத்தின் நிர்வாக திறமை இன்மையால் தான் நாட்டில் வறுமை வேலையின்மை பெருகிவிட்டதாக பிரச்சாரம் செய்தார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற முயன்றார்.ஆனால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.அரசாங்கம் அவரை கைது செய்து 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பின்பு அது ஓராண்டு தண்டனையாக குறைக்கப்பட்டது.சிறையிலிருந்த போது "எனது போராட்டம்"என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார்.
1928 இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது.ஆனால் ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.தன்னுடைய கட்சியின் பெயரை "நாசி"கட்சி என்று மாற்றி நாடுமுழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார்.அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தார்.
இவருடைய இடைவிடாத உழைப்பும் பேச்சுத் திறனும் இராஜ தந்திரமும் வெற்றி பெற்றன.ஆட்சிக்கு எதிராக மக்ககள் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாராளுமன்ற கட்டடம் கொளுத்தப்பட்டது.ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்தார்.1933 ஜனவரி 30 ஆம் திகதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார்.
அதனால் ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜேர்மனின் சர்வாதிகாரியானார்.பாராளுமன்றத்தை கலைத்தார்,இராணுவ திணைக்களத்தினையும்,இராணுவ தளபதி பதவியினையும் தானே ஏற்றுக்கொண்டார்.அரசியல் கட்சிகள் எல்லாவற்றையும் தடை செய்தார்.இனிமேல் ஜெர்மனியில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை என அறிவித்தார்.
யூதர்களை அடியோடு அழிக்க வேண்டும் என முடிவு செய்து ஒரு பாவமும் அறியாத யூதர்களை கைது செய்து சிறையில் பட்டினி போட்டு சித்திரவதை செய்து கொன்றான்.தினமும் சராசரியாக 6000 - 10000 பேர் வரை விஷப் புகையிட்டு கொல்லப்பட்டனர்.ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் ஐம்பது லட்சம் ஆகும்.1939 அல்பேனியா,செக்கொச்லோவக்கியா ஆகிய நாடுகளை கைப்பற்றிக்கொண்டு போலந்து நாட்டின் மீது படைஎடுத்தான்.
இதனால் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமாகியது.யுத்தத்தின் ஆரம்பத்தில் ஹிட்லரின் கை ஓங்கியிருந்தது.ஆனால் போரில் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்த பின்பு நிலைமை மாறியது.ஜேர்மனி தலைநகரான பெர்லினில் ஒரு சுரங்கம் அமைத்து தங்கியிருந்தார்.இச் சுரங்கத்தில் தான் ஹிட்லரின் அலுவலகமும் படுக்கை அறையும் இருந்தது.ஹிட்லரின் அறை 15 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்டது.1945 ஏப்ரலின் பின் பெர்லின் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுகளை வீசின.ஹிட்லர் தங்கியிருந்த பாதாள சுரங்கத்தின் அருகிலும் குண்டுகள் விழுந்தன.ஈவா பிரவுன் என்ற பெண் 1930 ஆம் ஆண்டு முதல் ஹிட்லர் உடைய மனம் கவர்ந்த காதலியாக இருந்து வந்தார்.
ஹிட்லரின் மரண சாசனம்
ஹிட்லர் இறப்பதுக்கு முன் எழுதிய மரண சாசனத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
நாங்கள் இறந்த பிறகு எந்த ஜெர்மன் நாட்டு மண்ணுக்காக கடந்த 12 வருடங்களாக பாடுபட்டு வந்தேனோ இந்த ஜெர்மன் மண்ணிலேயே என்னையும் ஈவாவையும் உடனே எரித்து விட வேண்டும்
என் சொத்துக்கள் எல்லாம் எனக்கு பிறகு என் கட்சிக்கு சேர வேண்டும்.கட்சி அழிந்து விட்டால் நாட்டுக்கு சேர வேண்டும்.
ஜெர்மனி மண்ணின் மீதும், மக்கள் மீதும் நான் கொண்ட பற்றும் பாசமும்தான் என்னை வழிநடத்தின .கடந்த 30 ஆண்டுகளாக என் சக்தி முழுவதையும் என் தாய் நாட்டின் மேன்மைக்காக செலவிட்டிருக்கிறேன் .
இந்தப் போருக்கு நானே மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம்.ஏனென்றால் போர் வெறி கூடாது .ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும்,என்று நானே வலிறுத்தி இருக்கிறேன்.
முதல் உலகப்போருக்கு பிறகு இப்படி இரண்டாவது உலகப்போர் மூளும் என்று நான் சற்றும் நினைக்கவில்லை .எப்படியோ போர் மூண்டுவிட்டது.
இந்தப்போரினால் நம் நாடு சந்தித்த பயங்கர விளைவுகள்,நாசமாக்கப்பட பிரம்மாண்டமான மாளிகைகள்,தரைமட்டமாக்கப்பட்ட கலையம்சம் மிக்க நினைவுச்சின்னங்கள் யாவும் நம் மீது உலக நாடுகள் நடத்திய கோரத்தாக்குதலை நம்முடைய பிற்கால சந்ததியினருக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.
இந்த போருக்கு காரணமானவர்களை பார்க்கும் போதெல்லாம் ஒவ்வொரு ஜேர்மனிய இளைஞனுக்கும் உணர்ச்சியும் எழுச்சியும் ஏற்ப்படும்
இவ்வாறு இறுதிச் சாசனம் எழுதி கையெழுத்திட்டார் ஹிட்லர்.
30 ஆம் திகதி இரவு 9 மணி "இன்று மாலை 4 மணிக்கு இத்தாலிய சர்வதிகாரி "முசோலினி"முசோலினியும் அவரது மனைவியும் எதிர்ப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர் ".என்று சுவீடன் நாட்டு ரேடியோ அறிவித்தது
ரேடியோ செய்தியை ஹிட்லர் நேரடியாக கேட்டார் .முசோலினியின் முடிவு,ஹிட்லருக்கு மிகுந்த வேதனையை உண்டாக்கியது .அன்றிரவு 12 மணி பெர்லின் நகரம் முற்றிலுமாக ரஷியப்படைகள் வசமாகிவிட்டது என்றும் எந்த நேரத்திலும் ,சுரங்க மாளிகை தகர்க்கப்படலாம் என்றும் ,ஹிட்லருக்கு தகவல் கிடைத்தது.
ஹிட்லரின் முகம் இருண்டது .மவுனமாக எழுந்து ,தன் தோழர்களுடன் கை குலுக்கினார் .பிறகு தன் அந்தரங்க உதவியாளரை அழைத்து ,"நானும் ஈவாவும் ஒன்றாக இறந்துவிடப்போகிறோம்.நாங்கள் இறந்த பின் எங்கள் உடல்களை ஒரு போர்வையில் சுருட்டி ,பெட்ரோல் ஊற்றி எரித்து சாம்பலாக்கி விடுங்கள்.எங்கள் அறையில் உள்ள கடிதங்கள்,டைரிகள்,என் உடைகள் என் பேனா,கண்ணாடி முதலிய பொருட்களை சேகரித்து ,ஒன்று விடாமல் எரித்து விடுங்கள்"என்று கூறிவிட்டு தன் மனைவியையும் அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றார்.
அறைக்கதவு சாத்தப்பட்டது .வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.ஹிட்லரும் ,ஈவாவும் என்ன ஆனார்கள் என்று வெளியே இருந்தவர்களுக்கு தெரியவில்லை. வெளியே நீண்ட நேரம் காத்திருந்த மந்திரிகளும் ,தளபதிகளும் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் .
அங்கே அவர்கள் கண்ட காட்சி
ஒரு சோபாவில் உட்காந்திருந்த நிலையில் ஹிட்லரின் உயிரற்ற உடல் . அவர் காலடியில் ஒரு துப்பாக்கி கிடந்தது.அவர் சற்றுநேரத்துக்கு முன்னர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றதால் துப்பாக்கி நுனியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது.அவரின் வலது காதுக்கு கீழிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டுஇருந்தது.ஹிட்லரின் வலது கரம ஒரு புகைப்படத்தை மார்போடு அணைத்தபடி இருந்தது.அது ஹிட்லரின் தாயாரின் புகைப்படம்.
அவருடைய மனைவி ஈவா வெள்ளைப்புள்ளிகளோடு கூடிய கருநீல மாக்சி உடை அணிந்து இருந்தால்.அவள் உடல் நீலம் பாய்ந்திருந்தது.எனவே அவள் சைனட் விஷம் சாப்பிட்டிருக்க வேண்டும் என்பது புலனாகியது.இருவரது உடலையும் உதவியாளர்கள் ஒரு கம்பளிப்போர்வையில் சுற்றினார்கள்.பின்னர் அந்த உடல்களை தலைமைச் செயலகத் தோட்டத்திற்கு தூக்கிகொண்டு போய் சிலமணி நேரம் அங்கு வந்த ரஷ்ய படைகள் ஹிட்லரை காணாமல் திகைத்து போனார்கள்.ஹிட்லர் ஈவு இரக்கம் அற்ற கொடியவராக இருந்தாலும் சில நல்ல குணங்களும் இருந்தன.ஹிட்லர் குழந்தைகளிடமும் மிருகங்களிடமும் அன்பு கொண்டவர்.மாமிசம் சாப்பிடமாட்டார்.புகை பிடிக்கமாட்டார்.

பேசாமல் பேச வைத்த கலைஞன்-சார்லி சாப்ளின்

பொருளாதார பெருமந்தம் சர்வதேசத்தையே முடக்கிப் போட்டிருந்த 1930கள்… பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் தொழிற்சாலைகளில் வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பு. அப்படியே கிடைத்தாலும் சம்பளம் வாங்குவதற்குள் உன்னைப் பிடி என்னைப்பிடி என்றாகிவிடும். ரொட்டி என்பது மிகக் காஸ்ட்லியான உணவு ஏழை மக்களுக்கு.

அந்த சூழலில், எவ்வளவு வேலைச்சுமையாக இருந்தாலும் அதை செய்தே தீர வேண்டிய கட்டாயம் தொழிலாளர்களுக்கு.
இன்ன...ொரு பக்கம் வேலைப்பகுப்பு முறையின் கொடுமை. வேலைப் பகுப்பு முறை என்பது, “ஒருவருக்கு எந்த வேலை சரியாகச் செய்ய வருகிறதோ அதை மட்டுமே தொடர்ந்து செய்வது..” உதாரணம், திருகாணியின் மரையைத் திருகுவதுதான் ஒருவருக்கு சரியாக வரும் என்றால், தொடர்ந்து அதே வேலையைச் செய்வது..
இந்த சமூக அவலங்களை, அவை நடக்கும் காலகட்டத்திலேயே ஒரு சினிமா மூலம் நச்சென்று சொல்ல வேண்டும். ஆனால் டாக்குமெண்டரி மாதிரி சொல்லிக் கொண்டிருந்தால் யார் பார்ப்பார்கள்…
ஆனால பார்க்க வைத்தார் ஒருவர்… அவர்தான் சார்லி சாப்ளின்..
படம்: மாடர்ன் டைம்ஸ்!
உலகின் மிகச் சிறந்த புரட்சிகரமான படம் என்று கூட இதைச் சொல்லலாம்.
வசனங்கள் இல்லை, அதிரடி சண்டை, கிராபிக்ஸ், அட குறைந்த பட்சம் ரொமான்ஸ் கூட கிடையாது. ஆனால் பார்ப்போரின் இதயங்களை வசப்படுத்தும் நையாண்டி, உணர்வுகள், அரசியல் எள்ளல் என புதிய கலவையாக இருந்தது அந்தப்படம்.
குறிப்பாக, நேரத்தை மிச்சப்படுத்த சாப்பாடு ஊட்டிவிடும் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பதாக வரும் காட்சி… எள்ளலின் உச்சம்!
மாநிலக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் திரையில் நான் பார்த்த முதல் சாப்ளின் படம் இதுதான். அதன் பிறகு இந்தப் படத்தை எத்தனையோ முறைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அந்த முதல் 20 நிமிட தொழிற்சாலை காட்சிகளைப் பார்க்க வேண்டும் என டிவிடியில் ஓடவிட்டால், என்னையும் அறியாமல், படம் முடியும் வரை அதிலேயே லயித்துவிடுவது, இந்தப் பதிவை எழுதும் வரை தொடர்கிறது!

மகாத்மாவுடன்..

சாப்ளின் – சில குறிப்புகள்
சார்லி சாப்ளின் என்ற திரைக்கலை மேதை மீது விவரம் தெரிந்த நாள் முதல் நேசம் கலந்த மரியாதை உண்டு. கலைவாணர், புரட்சித் தலைவர் படங்களை விரும்பிப் பார்ப்பது போலவே, சார்லி சாப்ளினின் படங்கள் எங்கே ஓடினாலும் தேடிப் போய் பார்த்துவிடுவேன்.
அந்த அற்புத கலைஞனைப் பற்றி சில வரிகளுக்குள் சொல்வது சாத்தியமான விஷயமே அல்ல…
எல்லோரும் சினிமாவை எப்படி தங்களை முன்னிலைப்படுத்த மட்டுமே கையாளலாம் என யோசித்துக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், சாப்ளின் மட்டுமே சினிமாவை சமூக விழிப்புணர்வுக்கான கருவியாக மாற்றினார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்குப் பகுதியில் ஒரு ஏழை மேடைப் பாடகனின் மகனாக 1889-ல் பிறந்தவர் சாப்ளின். 5 வயதிலேயே நாடக மேடைகளுக்கு அவர் நன்கு அறிமுகமாகிவிட்டார். தான் பெற்ற அனுபவங்களைத்தான் பின்னாளில் திரைப்படங்களில் வெகு யதார்த்தமாகக் காட்டினார்.
பெரிதாக படிப்பறிவில்லை. 21 வயது வரை வறுமையுடன் போராடிய அந்த கலைஞன், பின்னர் அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார். 1913-ல் ஊமைப் படங்களில் தலைகாட்ட ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்தில் போட்டது வில்லன் வேஷம். வில்லனாக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்வது சாப்ளின் காலத்திலிருந்தே தொடர்கிறது போலும்!
இரண்டாவது படத்திலேயே காமெடியை தனது பிரதான அஸ்கிரமாக்கிக் கொண்டார். ‘கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ்’ என்ற அந்தப் படத்தில்தான் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத்தொப்பி, கையில் சிறு தடி என தனது ட்ரேட் மார்க் வேடத்துக்கு மாறினார்.

மாடர்ன் டைம்ஸ் படத்தில்...
அதன்பிறகு ஒரே ஆண்டில் 35 படங்களில் நடிக்கும் சூப்பர் நடிகராக மாறிவிட்டார் சாப்ளின். இவை அனைத்துமே கிட்டத்தட்ட வெற்றிப் படங்கள்தான். 1916 ம் ஆண்டில் சாப்ளின் வாங்கிய சம்பளம் வாரம் 10000 டாலர்கள்!
இன்னொன்று அன்றைக்கே, குறும்படம், இரண்டு ரீல் சினிமா என பெரிய திரைப் புரட்சியே நடத்திக் காட்டியவர் சாப்ளின்.
நடிகராக இருந்தவர் பின்னர் இயக்குநராகவும் உயர்ந்தார்.
1919-ல் யுனைட்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார், நண்பர்களுடன் இணைந்து. இந்த பேனரில் வெளிவந்த படம்தான் சிட்டி லைட்ஸ் (1931).
மௌனப் படங்களுக்கு மவுசு குறைந்து, பேசும் படங்கள் வரத் தொடங்கியிருந்த காலகட்டத்தில்தான் (1936) இந்த மாடர்ன் டைம்ஸ் வெளியானது. இப்படத்தில் மற்றவர்கள் பேசினாலும், சாப்ளின் பேசவே மாட்டார். ஆனால் சரித்திரத்தில் பேச வைத்தார் அந்தப் படத்தை.

கிரேட் டிக்டேட்டர்

சாப்ளின் சாதனைகளுக்கு சிகரம் என்றால், சர்வாதிகாரி ஹிட்லரைக் கிண்டலடித்து அவர் தயாரித்து இயக்கி 1940 ம் ஆண்டு வெளியான ‘தி கிரேட் டிக்டேட்டர்’. இந்தப் படத்தில்தான் முதல்முதலில் அவர் வசனம் பேசினார்.
ஹிட்லர் சர்வ பலம் மிக்க சர்வாதிகாரியாக கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டத்தில் வெளியான படம் இது என்பதிலிருந்தே, சாப்ளின் என்ற கலைஞனின் ஆளுமை என்ன என்பது புரிந்திருக்கும்.
உலகம் முழுவதும் இப்படம் திரையிடப்பட்டு, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. 1952 ல் அவர் “லைம் லைட்” என்ற படத்தில், சீரியசான வேடத்தில் நடித்தார்.
அவரது கடைசி படம் A Countess from Honk Kong (1967). நடித்தவர்கள் மார்லன் பிராண்டோ – சோபியா லாரன். இந்தப் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றுவார் சாப்ளின். அதுதான் அவரது கடைசி திரைத் தோற்றமும் கூட.

மாடர்ன் டைம்ஸ் - சர்வதேச சிறப்புக் காட்சி
பின்னர் தனது பழைய படங்களுக்கு புத்தம் புதிதாய் இசைச் சேர்த்து மறுவெளியீடாகக் கொண்டுவந்தார். அப்போதும் அவை பெரும் வெற்றி பெற்றன.
சாப்ளின் மிகச் சிறந்த இசையமைப்பாளர். லைம்லைட் (1952) படத்தின் ஒரிஜினல் ஸ்கோருக்காக சார்லி சாப்ளினுக்கு ஆஸ்கர் தரப்பட்டது.
இது தவிர 1929 மற்றும் 1972 ம் ஆண்டுகளில் அவருக்கு கவரவ ஆஸ்கர் விருது தரப்பட்டது.
ஆனாலும் உள்ளுக்குள் அவரது ஏக்கம், தனது படங்கள் மூலம், தனது நடிப்புக்காக அந்த ஆஸ்கர் கிடைக்கவில்லையே என்று. அதுவே பல தருணங்களில் ஆஸ்கர் கமிட்டி மீதான கிண்டலான விமர்சனமாகவும் அவரிடமிருந்து வெளிப்பட்டுள்ளது.
‘கம்யூனிஸ்ட்’ சாப்ளின்…

லண்டனில் சாப்ளின் சிலை
உலகம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்ற சிட்டி லைட்ஸ், கிரேட் டிக்ட்டர் போன்றவை ஒரு ஆஸ்கர் விருதுக்குக் கூடப் பரிந்துரைக்கப்படவில்லை. காரணம், அவரது அரசியல் நிலைப்பாடுகள் என்கிறது சரித்திரம். இருந்தாலும் பிரிட்டிஷ் அரசு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
சாப்ளின் முழுக்க முழுக்க கம்யூனிஸ சித்தாந்தத்தின் ஆதரவாளர். மேற்கத்திய நாடுகள் அவரை ஒரு கம்யூனிஸ்டாரகவே பார்த்தனர். தனது படங்கள் பெரும்பாலானவற்றில் கம்யூனிஸக் கருத்துக்களை போகிறபோக்கில் நச்சென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார் சாப்ளின்.
சொந்த வாழ்க்கையில் அவருக்கு நிறைய சோகங்கள் இருந்தாலும், 1977-ல் ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது இறுதி மூச்சு அடங்கும் வரையிலும் மக்களைச் சிரிக்க வைத்து சிந்திக்க வைக்கும் பெரும் முயற்சியைத் தொடர்ந்து கொண்டே இருந்த ஒப்பற்ற கலைஞன் அவர்.
ஒரு கலைஞன் எப்படிப்பட்ட படைப்புகளை மக்களுக்குத் தரவேண்டும் என்று பாடம் எடுத்த ஆசானும் கூட!

கிரேக்க மன்னரான அலெக்சாண்டர்

கிரேக்க மன்னரான அலெக்சாண்டர்,

உலகில் இதுவரை தோன்றிய மாவீரர்களில் தலைசிறந்தவராக போற்றப்படுகிறார். 20 வயதில் மன்னராகி, 32 வயதுக்குள் பல நாடுகளை வென்ற அலெக்சாண்டர், வரலாற்றில் அழியா இடம் பெற்றவர்.
கிரேக்கத்தில் மாசிடோனியா நாட்டை ஆண்டு வந்த பிலிப் என்ற மன்னரின் மகன் அலெக்சாண்டர், கி.மு 356 ஆம் ஆண்டில் பிறந்தார்.சிறு வயதிலேயே சிறந்த வீரராகத் திகழ்ந்தார்.குதிரை சவாரி செய்வதில் அவருக்கு எவரும் நிகரில்லை... என்று புகழ் பெற்றார்.
கிரேக்க நாட்டின் மாபெரும் சிந்தனையாளர் சோக்கிரடிசின் சீடரான பிளேட்டோவின் சீடர் அரிஸ்டோட்டில்,அலெக்சாண்டரின் குருவாக அமர்த்தப்பட்டார்.அதனால அலேசாண்டர் வீரராக மட்டுமின்றி,சிறந்த ராஜதந்திரியாகவும்,நீதமானாகவும் உருவானார்.

பிலிப் மன்னர் ஒரு போரில் ஈடுபட்டிருந்த போது கொலை செய்யப்பட்டார்.அதைத்தொடர்ந்து அலேசாண்டர் மன்னரானார்.அப்போது அவருக்கு வயது 20 . அப்போது நாட்டின் வடபகுதியில் கலவரங்கள் நடந்து வந்தன.அவற்றை அலெக்சாண்டர் அடக்கினார்.கிரேக்கம் முழுவதும் அவர் ஆட்சியின் கீழ் வந்தது.கிரேக்க நாகரிகத்தை வெளிநாடுகளிலும் பரப்ப விரும்பிய அலெக்சாண்டர், பாரசீகத்தின் மீது படையெடுத்தார்.அவருடைய படையில் 20 ஆயிரம் காலாட்படையினரும், 5 ஆயிரம் குதிரை வீரர்களும் இருந்தனர்.யுத்தத்தில்.பாரசீக மன்னர் தோல்வி அடைந்தார்.சிறை பிடிக்கப்பட்ட அவருடைய தாயாரையும், மனைவியையும் அலெக்சாண்டர் கண்ணியத்துடன் நடத்தினார்.
அலெக்சாண்டர் - இந்தியாந்த சமயத்தில் இந்தியாவில் சிந்து வெளிப் பகுதியை பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.அலெக்சாண்டர் கி.மு 326 இல் சிந்து ஆற்றை கடந்து இந்தியாவுக்குள் நுழைந்தார். அலெக்சாண்டரின் போர்த்திறனை நன்கு அறிந்த தட்சசீல அரசன்,அவரை வரவேற்று நட்புக் கொண்டான்.ஆனால் புருஷோத்தமன் என்ற மன்னன் அலெக்சாண்டரை எதிர்த்தார்.ஜீலம் நதிக்கரையில் இரு படைகளும் மோதின.அதில் வழக்கம் போல அலெக்சாண்டர் வென்றார்.
தோல்வி அடைந்த புருஷோத்தமரை பார்த்து "நான் உங்களை எவ்வாறு நடத்த வேண்டுமென்று நினைக்கிறீகள்?"என்று அலெக்சாண்டர் கேட்டார்."என்னை ஓர் அரசனைப் போல நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்"என்று புருஷோத்தமர் தைரியமாகப் பதில் அளித்தார்.அவருடைய வீரத்தை மெச்சிய அலெக்சாண்டர்,தான் கைப்பற்றிய நாட்டை புருஷோத்தமருக்கே திருப்பி கொடுத்துவிட்டார்.அலெக்சாண்டர் - இறுதிக்காலம்
மேலும் பல நாடுகளை வெல்ல வேண்டும் என்று அலெக்சாண்டர் விரும்பினார்.அனால் பல ஆண்டுகளாகப் போர் புரிந்து சலித்துப்போன போர் வீரர்கள்,தாய் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று கோரி கலகத்தில் ஈடுபட்டனர்.இதனாற் அலெக்சாண்டர் வேறு வழியின்றி,கிரேக்கத்துக்குத் திரும்பி செல்ல முடிவு செய்தார்.போர் வீர்கள் பலர் தரை வழியாகவும்,சிலர் கடல்வழியாகவும் திரும்பிச் சென்றனர்.அலேசாண்டர் தரை மார்க்கமாகத் திரும்பிச் சென்ற போது,பாபிலோன் நகரில் விஷ ஜுரம் கண்டு மரணம் அடைந்தார்.அப்போது அவர்க்கு வயது 32.

Sunday, October 9, 2011

சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு!

உலகின் தொன்மையான நாகரிங்களில் மிகப் பெரியதும் பல துறைகளில் சிறந்ததும் சிந்துச் சமவெளி நாகரிகம் ஆகும். ஆனால், உலகின் பிற தொன்மை நாகரிகங்களுக்கு நேராத அவலம் தமிழர் நாகரிகமான சிந்துவெளிக்கு நேர்ந்து வருகிறது. எகிப்து நாகரிகம் எகிப்தியருடையத் சீன நாகரிகம் சீனருடையத் கிரேக்க நாகரிகம் கிரேக்கருடையது என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், சிந்துவெளி நாகரிகம் யாருடையது என்பதில் இந்துத்துவவாதிகள் ஏற்படுத்தி வரும் குழப்பங்களுக்கு அளவே இல்லை. சிந்துவெளியை "வேதகால நாகரிகம்" என்று கூசாமல் எழுதியும் பேசியும் வருகின்றனர் இந்துத்துவவாதிகள். திராவிட மாயைக்குள் சிக்கியவர்களோ, "அது திராவிட நாகரிகம்" என பொருந்தாப் பொய்யை உரைத்து வருகின்றனர். சிந்துவெளியைப் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளும் போதெல்லாம், "பழங்கதை பேசுவதால் என்ன பயன்?" என்று கேலி செய்யும் வழக்கம் ஒருபுறம்.
கடந்தகால வரலாற்றைப் பயிலாமல் புதிய வரலாறு படைக்க இயலாது என்பதே சமூக அறிவியல். சிந்துவெளி நாகரிகம் என்பதே, ஆரியருக்கு எதிரானது. ஆரியரை எதிர்த்துப் போரிட்ட தமிழரின் வரலாறு. ஆரியரின் யாகங்களை சிந்துவெளித் தமிழர் எதிர்த்தனர். ஆரியருக்கும் தமிழருக்குமான பகை சிந்துவெளியிலேயே தொடங்கிவிட்டது. இந்த உண்மைகள் ஆய்வுகளின் அடிப்படையில், மறுக்கவியலா வண்ணம் முன் வைக்கப்பட்டால் மட்டுமே இன்றைய தமிழினம் தன் பகையை எதிர்த்துப் போராடும்.
சிந்துச் சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கான சான்றுகள் ஏராளமாக வெளி வந்துள்ளன. ஆயினும், சிந்துச் சமவெளிக்கும் தமிழகத்திற்குமான உறவு / தொடர்பு குறித்த சான்றுகள் ஏதும் இல்லாத நிலை கடந்த காலத்தில் நிலவியது. ஆய்வுலகில் இது ஒரு குறையாகவே கருதப்பட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத் துக்குமான விடுபட்ட இணைப்பு, இணைக்கப்படும் அளவுக்கான ஆய்வுகள் தற்போது வெளிவரத் தொடங்கிவிட்டன. இது தமிழர் வரலாற்று ஆய்வுகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சியாகும்.
சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் என்பதைப் பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர். சிந்துவெளி எழுத்துகளின் ஒலி வடிவம், தமிழில் இன்றும் புழங்கும் சொற்களுடன் கூடியவையாக உள்ளன
"சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்" என்ற நூலை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நூல் முனைவர் ஐராவதம் மகாதேவன் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இந்நூலில் அவர் குறிப்பிடத்தக்க சான்று ஒன்றை விளக்கியுள்ளார். அவரது ஆய்வின் வெளிச்சத்தில், சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவு நிலைகளை முன் வைக்கிறேன். முனைவர் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளிப் பண்பாட்டுக் கூறுகளை "இந்து மதத்தோடு" தொடர்பு படுத்துகிறார். இக்கருத்தை இக்கட்டுரை ஏற்கவில்லை. இது குறித்து வேறு வாய்ப்பில் விரிவாகக் காணலாம்.
கபிலர் பாடிய இருங்கோவேள்
கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி போரில் மரணமடைந்த பிறகு, பாரியின் நண்பரும் அறிவாளருமான கபிலர், பாரியின் இரு மகள்களான அங்கவை சங்கவை ஆகியோரை அழைத்துக் கொண்டு பறம்பு மலையிலிருந்து வெளியேறுகிறார். பாரி மகளிரைத் திருமணம் செய்துகொள்ளும்படி, எருமை நாட்டுத் துவரை நகரில் அரசாண்ட இருங்கோவேள் எனும் மன்னனைச் சந்திக்கிறார் கபிலர். எருமை நாடு என்பது, இன்றைய மைசூர் ஆகும். எருமை நாடு, என்பது பழந்தமிழப் பெயர். எருமை என்பதை வட மொழியில் மகிஷம் என்றாக்கினர். மகிஷ நாடு, பின்னாளில் மைசூர் ஆனது. துவரை நகரம் எனச் சங்க இலக்கியங்கள் குறிக்கும் நகரம் இன்று மைசூர் அருகே உள்ள துவாரகா நகரமே ஆகும். எருமையூர் மகிசூர் என்றாகி, மைசூர் ஆனதுபோல், துவரை நகரம், துவாரகா ஆகிவிட்டது.
துவரையில் இருந்த இருங்கோவேளைச் சந்தித்து, கபிலர் தமது வேண்டுகோளை முன் வைக்கிறார். அதன் சுருக்கம்:
"இருங்கோவேளே... என்னுடன் வந்துள்ள இவர்கள் யார் என்றால், பறம்புத் தலைவன் பாரியின் மகளிர். நான் இவர்கள் தந்தையின் தோழன். நீ யார் தெரியுமா? வடக்கில் வாழ்ந்த முனிவனது பெரும் மண் பாண்டத்தில் தோன்றிய வேளிர் பரம்பரையின் நாற்பத்து ஒன்பதாம் வாரிசு நீ. உன் முன்னோரான வேளிர், வடக்கே... செம்பினால் கட்டியது போன்ற உயரமான மதில் சுவர்களையுடைய துவரை என்னும் நகரை ஆண்டவர்கள்.
- இந்தப் பாடலில்தான் சிந்து வெளிக்கும் தமிழகத்துக் குமான இணைப்பு ஒளிந்துள்ளது.
கபிலர் இருங்கோவேளின் முன்னோர் குறித்து உரைத்த சேதி,
"நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்ற வரியில் தொடங்குகிறது.
"வடபால் முனிவன்" யார் என்பதில் கடந்த காலத்தில் பல முரண்பட்ட முடிவுகள் முன்வைக்கப்பட்டன. வடக்கே வாழ்ந்த முனிவர் ஒருவர், அங்கிருந்த துவரை நகரை ஆண்ட வேளிர்குலத்தவரைத் தமிழகத்துக்கு அழைத்து வந்தார் என்பதே பாடல் கூறும் சேதி.
"வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றால், வடக்கே வாழ்ந்த முனிவனது "பெரும் மண் பாண்டத்தில் தோன்றி" என்று பொருள். பல உரையாசிரியர்கள் தடவினுள் என்பதற்கு, 'ஓமகுண்டத்தில்' என்று தவறாகப் பொருள் கூறினர். 'தட' என்பது மண் பாண்டத்தைக் குறிக்கும். சிந்துவெளியின் சின்னங்களில் மண்பாண்டம் ஒன்றாகும். மேலும், தொல் பொருள் ஆய்வுகளில் 'தட' என்பது மண்பாண்டத்தையே குறிப்பதாக முனைவர் ஐராவதம் மகாதேவன் நிறுவியுள்ளார்.
வடபால் முனிவன் என்பவர், அகத்தியர்தான் என்பதே இக் கருத்தின் அடிப்படை. அகத்தியர் குறித்த தகவல்களில் இந்த இடத்திற்குப் பொருத்தமானது ஒன்றைக் காண்போம்.
துவரை என்பது வட நாட்டில் கண்ணன் ஆட்சி செய்த நகரம் அல்லது நாடு. அகத்திய முனிவர், கண்ணனிடமிருந்து 12 வேளிர்குலத்தவரை, தென்னாடு அழைத்து வந்தார் என்பது நச்சினார்க்கினியார் விளக்கம். அகத்தியர் வடக்கே இருந்து வந்தவர் என்பதைத்தான் ஏறத்தாழ எல்லா புராணங்களும் கூறுகின்றன.
கண்ணன் தமிழன்
நச்சினார்க்கினியரின் குறிப்பிற்கும் கபிலரின் பாடலுக்கும் நேரடி உறவே உள்ளதைக் கவனிக்கலாம்.
அதாவது, துவரையை ஆண்ட கண்ணன் ஏதோ ஒரு காரணத்திற்காக அகத்திய முனிவரை அழைத்து, 12 வேளிர் குலத்தவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். இதைத்தான் கபிலர், "வடபால் முனிவர் தடவினுள் தோன்றி" என்கிறார். மண்பாண்டம் என்பது அகத்தியருக்கான குறியீடு. அக்கால, சிந்துவெளி எழுத்துக்கள் சித்திர வகைப்பட்டவை. சித்திரங்களின் வழிதான் அவர்கள் மொழியைப் பதிவு செய்தார்கள். அதன்படி, மண்பாண்டம் அல்லது கும்பம் என்பது அகத்தியரைக் குறிக்கும் என்பது முனைவர் ஐராவதம் மகாதேவன் ஆய்வு முடிவு.
இந்த இடத்தில் வேறொரு வரலாற்று ஆய்வையும் நாம் காண வேண்டும். சிந்துவெளியில் வாழ்ந்த தமிழர்களின் நகரங்களை அழித்தொழித்த ஆரியர்கள், அடுத்ததாக கங்கைச் சமவெளிக்கு வந்தார்கள். அங்கே இருந்த நகரம் துவரை என்பதாகும். அதாவது, இன்றும் துவாரகா எனப்படும் நகரமே அக்கால துவரை. துவரையின் மன்னன் கண்ணன். கண்ணனைப் பற்றிய குறிப்பை, ஆரிய வேதங்களின் மூலங்களில் ஒன்றான பாகவதம் பதிவு செய்துள்ளது. பாகவதம், கண்ணனை 'தாச யாதவன்' என்கிறது. சிந்துவெளி மக்களையே ஆரியர் தாசர் என்றனர். தாசர் என்றால், வள்ளல் என்று பொருள். பின்னாளில் தாசர் என்றால், அடிமை என ஆரியரால் பொருள் மாற்றப்பட்டது என்ற கருத்தை ஆய்வாளர் கோசாம்பி முன் வைத்துள்ளார். (சிந்து முதல் குமரி வரை - குருவிக்கரம்பை வேலு) ஆக, தாச இனத்தைச் சேர்ந்தவனே கண்ணன். இந்தக் கண்ணன் ஆண்ட நகரம் துவரை!
கண்ணன், தமிழ் இனத்தைச் சேர்ந்த மன்னன் என்பது இக்கருத்தால் உறுதிப்படுகிறது. கண்ணன் மற்றும் அவனது மக்களின் நிறம் கருப்பு என்பதை பாகவதம், ரிக் வேதம் ஆகியன மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளன. கண்ணனது படைகளுடன் ஆரிய இந்திரன் படைகள் போரிட்டுத் தோற்றதாக பாகவதம் கூறுகிறது. போரில் ஆரியர் வென்றதாகவும் கண்ணன் படை தோற்றதாகவும் ரிக் வேதம் கூறுகிறது.
"கண்ணன் கருப்பு நிறத்தவன் தாச இனத்தவன். அவனுக்கும் ஆரியருக்கும் போர் நடந்தத் ஆரியர் தலைவன் இந்திரன்" ஆகிய தகவல்களை ஆரியரின் வேதங்களே ஏற்றுக் கொள்கின்றன. ஆகவே, கண்ணன் ஆரியன் அல்லன் என்பது மிகத் தெளிவானது. மேலும், அவன் தமிழன் என்பதற்கான புறச் சான்றுகளும் உள்ளன.
அகத்தியர், அக்கால அறிவாளர்களில் தலைமைத்துவம் வாய்ந்தவர். தமிழரின் பேரரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு முக்கியப் பங்குண்டு. ஆனால், அகத்தியரை ஆரிய முனிவர் என்று, ஆரிய வேதங்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கின. அவை, அகஸ்தியர் என்று அவரை அழைத்தன. ஆய்வறிஞர் டி.டி.கோசாம்பி, அகத்தியரை சிந்துவெளியோடு தொடர்புடையவராக இருக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். (பண்டைய இந்தியா - அதன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய வரலாறு)
அகத்தியரோடு தொடர்புடைய 'தட' குறித்து கோசாம்பியும் விளக்கியுள்ளார். தட என்பது மண்பாண்டத்தைக் குறிக்கும் எனக் கண்டோம். மண்பாண்டம் என்பது, பொருண்மையான சொல். நடைமுறையில் - அகத்தியரைக் குறிக்கையில், இது கும்பம் ஆகும். அதாவது, அகத்தியரின் சின்னம் கும்பம். கும்பம் என்பது கருப்பையின் குறியீடு என்கிறார் கோசாம்பி. பண்டைய பண்பாடுகளை ஆய்பவர்களுக்கு குறியீட்டு மொழி விளங்க வேண்டும். இது அடிப்படையானதும் இன்றியமையாததும் ஆகும். ஏனெனில், அக்கால மக்கள் தமது பண்பாட்டு நடவடிக்கைகளை உரைநடையாக எழுதவில்லை. புனைவுகளாகத்தான் பதிவு செய்தனர். இன்று உள்ளது போல, மொழியின் எழுத்துரு வளர்ச்சியும் அக்காலத்தில் இல்லை. ஆகவே, குறிப்பிட்ட கருத்தை அவர்கள் ஏதேனும் குறியீடாக வரைந்து வைத்தனர். சான்றாக, தாமரை இதழ்கள், பிளந்த மாதுளைப் பழங்கள் ஆகியவை, பெண்ணின் பிறப்பு உருப்பைக் குறிக்கும் குறியீடுகள். இது போலவே, கும்பம் என்பது கருப்பையின் குறியீடு.
அகத்தியரின் குறியீடு கும்பம் என்பதால், அவரது பிறப்பு ஏதோ ஒரு தாய் தெய்வ வழிபாட்டுச் சமூகத்துடன் தொடர்புடையது என்ற கருத்தைக் கோசாம்பி முன்வைக்கிறார். சிந்துவெளித் தமிழர் தாய் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தனர். ஆரியர், இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகவே, அகத்தியர் சிந்துவெளியோடு நெருங்கிய உறவு கொண்ட தமிழரே, என்பதை உறுதிபடக் கூறலாம்.
ஆரியருக்கும் தமிழருக்கும் நடந்த போரின்போது ஏதோ ஒரு தவிர்க்க இயலாத சூழலில், துவரை மன்னன் கண்ணன் அங்கிருந்த வேளிர்குலத்தவரில் 12 பேரைத் தமிழகத்துக்கு அனுப்பிவிட்டான். இப்பணியை மேற்கொள்ள அவன் அகத்திய முனிவரது உதவியை நாடியுள்ளான். அவ்வாறு தமிழகம் வந்த 12 வேளிர் குலத்தவரும் காடு அழித்து துவரை நகரை உருவாக்கி ஆட்சிசெய்தனர். அந்தப் பரம்பரையில் 49 ஆம் வாரிசாக வந்தவனே இருங்கோவேள். அவனிடமே கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது, அவனது குலப் பெருமையாக, "நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றி" என்றார். இதுவே விடையாக இருக்க முடியும்.
இந்தக் கூற்றை வலுப்படுத்த மேலும் ஒரு சான்று உள்ளது. கபிலரே அந்தச் சான்றையும் விட்டுச் சென்றுள்ளார்.அழிந்த நகரங்கள்
இருங்கோவேள், பாரி மகளிரை ஏற்க இயலாதென மறுத்துவிட்டான்.இதனால் கோபம்கொண்ட கபிலர் அவனை நோக்கிப் பின்வருமாறு பாடினார்
"உன் முன்னோர் வாழ்ந்த சிற்றரையம் பேரரையம் ஆகிய இரு நகரங்கள் அழிந்துபோயின. அந்த நகரங்களில் பொன்னும் பொருளும் குவிந்து கிடந்தன. ஆயினும் அவற்றின் அழிவைத் தடுக்க முடியாமல் போனது. காரணம் என்ன தெரியுமா? கழாத்தலையார் என்ற புலவர் ஒருவரை உன் முன்னோர் அவமதித்தனர். அதன் விளைவுதான் இந்த நகரங்களின் அழிவு" என்கிறார் கபிலர். (புறநானூற்றில் சில பாடல்களை இயற்றிய கழாத்தலையார் வேறு. கபிலர் குறிப்பிடும் கழாத்தலையார் வேறு)
இருங்கோவேளின் முன்னோர் வடக்கே வாழ்ந்தவர்கள். அவர்களது இரு நகரங்கள் அழிந்தன. இதைக் கபிலர் "நீடுநிலை அரையத்துக் கேடு" என்கிறார். அரையம் என்றால், பெரும் நகரம் என்று பொருள். அரையம் என்பதன் திரிந்த வடிவமே அரப்பா என்ற கருத்து ஆய்வுலகில் நீண்ட காலமாக உள்ளது. முனைவர் ஐராவதம் மகாதேவன் இக்கருத்தையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறார்.
. வேளாளர் / வேளிர் என்ற சொல், எந்தச் சாதியையும் குறிக்கவில்€ல் அக்காலத்தில் சாதி அமைப்பும் நிலவவில்லை.
சிந்துவெளியின் முக்கியத் தொழில் வேளாண்மையே ஆகும். சிந்து ஆற்றின் குறுக்கே சிந்துத் தமிழர் அணைகள் கட்டி வேளாண்மை செய்தனர். அந்த நாகரிகம் ஆரியரால் அழிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பிய வேளிர் குலத்தவர், துவரையை ஆண்ட கண்ணனிடம் வந்திருக்க வேண்டும். கண்ணன், கால்நடைச் சமூகத் தலைவன். பண்டைய ஆரியப் பாடல்கள் கண்ணனை, 'தாச யாதவன்' என்கின்றன.
கண்ணன், வேளிருக்கு உதவி செய்து அகத்தியருடன் அவர்களைத் தமிழகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். தமிழகம் வந்த வேளிர் குலத்தவர், எருமை நாட்டைத் தேர்ந்தெடுத்து, அங்கிருந்த காட்டை அழித்து, வேளாண் தொழிலில் ஈடுபட்டு, அரசு அமைத்திருக்க வேண்டும். கண்ணன் ஆண்ட துவரை நகரிலிருந்து வந்ததால், பன்னிரு வேளிரும் தமது புதிய நகரத்துக்கும் "துவரை" என்றே பெயரிட்டிருக்க வேண்டும்.
இந்தக் கருத்துக்களையே கபிலர் பாடல்களும் பிற அறிஞர் ஆய்வுகளும் உணர்த்துகின்றன.
தமிழின் மிகத் தொன்மை வாய்ந்த அறிவாளரான அகத்தியர் இயற்றிய நூல் "அகத்தியம்" என்பதாகும். தொல்காப்பியத்துக்கும் முந்தையதான அந்நூல் அழிந்து விட்டது. சித்தர் மருத்துவ அறிவியலின் தந்தை அகத்தியரே ஆவார். எருமை நாட்டில் வேளிரை அரசாளச் செய்த அகத்தியர், வேளாண் விளை நிலங்களை உருவாக்க காவிரி ஆற்றிலிருந்து கிளைகளை வெட்டும் திட்டத்தில் பங்காற்றியிருக்க வேண்டும். "அகத்தியர்தான் காவிரி நீரை உருவாக்கினார்" என்ற கதை நீண்ட காலமாக நிலவுகிறது. இக்கதை புராணங்களின் வடிவில் கூறப்படுவதாலேயே புறக்கணித்துவிடக் கூடாது.
பொதுவாகவே, புராணங்களின் கற்பனைகளுக்கு இடையே வரலாற்று உண்மைகள் மறைந்தும் திரிந்தும் இருக்கும். ரிக் வேதத்தின் மந்திரங்களின் வழியேதான், சிந்துவெளித் தமிழரின் ஆரிய எதிர்ப்புப் போரை அறிந்து கொள்ள முடிகிறது. இலியட், ஒடிசி ஆகிய கிரேக்க இதிகாசங்களின் கற்பனைக் கதைகளின் ஊடாகவே கிரேக்க வரலாறு எழுதப்பட்டது.
சிந்துவெளிக்கும் தமிழகத்துக்குமான உறவில் இந்தக் குறிப்புகள் பல புதிய ஆய்வுகளை நோக்கி அழைத்துச் செல்லப் போகின்றன என்பதை உணர முடிகிறது.
சிந்துவெளிப் பண்பாட்டின் உன்னதமான கூறுகளை, மடை மாற்றி இந்துப் பண்பாட்டுக்குள் அடைக்கும் முயற்சிகள் நீண்ட காலமாகவே நடக்கின்றன. உண்மையில், இந்துத்துவம் எனும் தத்துவத்தின் ஆரிய மூலத்தை எதிர்த்தவர்களே சிந்துவெளித் தமிழர். இன்றும் இந்துத்துவத்தைத் தத்துவார்த்தமாகவும் நடைமுறையிலும் எதிர்க்கும் இனமாக தமிழ் இனமே உள்ளது. இந்த முரண்பாட்டை, ஆரியமயப்படுத்தவே ஆரியம் தொடர்ந்து முயற்சிக்கிறது. அகத்தியரை, ஆரிய முனிவர் ஆக்கியது போல, சிந்து வெளியையே, இந்துப் பண்பாட்டின் சின்னமாக மாற்றத் துடிக்கிறது ஆரியம்.
முனைவர் ஐராவதம் மகாதேவன், தமது ஆய்வின் முன்னுரையில், சிந்துவெளியில் இருந்த நீச்சல் குளத்தை, "இன்றைய இந்துமதக் கோயில் குளங்களின் முன்னோடி வடிவம்" என்கிறார். சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளரே, இவ்வாறான பிழையான / உள்நோக்கமுள்ள முடிவுகளை முன் வைப்பதைக் கவனிக்க வேண்டும். தமிழிய ஆய்வுலகம் இது போன்ற சதிகளை முறியடித்து வெற்றிகாண வேண்டும். தமிழ் இன உணர்வாளர்கள் தமிழிய ஆய்வுலகை ஆதரிக்க வேண்டும்

Wednesday, October 5, 2011

சாகித் உத்தம் சிங்

சாகித் உத்தம் சிங்



சாகித் உத்தம் சிங் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் மறைக்கப்பட்ட இன்னுமொரு தியாகி என்றே சொல்லலாம்.

உத்தம் சிங் 1899ல் பஞ்சாப்பில் உள்ள ஒரு சுனம் எனும் கிராமத்தில் தலால் சிங்க்குக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். தலால் இரயில்வே கேட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் தந்தை வைத்த பெயர் சேர் சிங். சேர் என்றால் இந்தியில் சிங்கம் என்று அர்த்தம்,
அவர் அப்பாவிற்கு தன் மகன் பிறந்தபொழுதே தெரிந்துவிட்டது இவன் பெரிய ஆளாக வருவான் என்று. ஆனால் சேர் சிங் இரண்டு வயதில் தன் தாயை இழந்தார், 8 வயதில் தந்தையையும் இழந்து. அமிர்த்சரில் ஒரு அனாதை விடுதியில் வளர்ந்தார். அனாதை விடுதியில் இவரது பெயரை உத்தம் சிங் என்று மாற்றினார்கள். இவருக்கு 18 வயதாகும் பொழுதே இவரது அண்ணனும் 1917ல் இறந்துவிட்டார் .
அதன் பிறகு இந்த இந்திய நாடே இவருக்கு இருந்த ஒரே சொந்தமாகி போனது. அதன் பிறகு தனது சொந்தமான இந்தியாவுக்காக வாழ்ந்தார் உத்தம் சிங். 1919ல் தனது பள்ளி படிப்பை முடித்து அனாதை விடுதியில் இருந்து வெளியில் வந்து தனது வாழ்க்கையை தொடங்கினார்.

1919ம் வருடம் ஏப்ரல் மாதம் 13ம் நாள் ஜாலியன் வாலாபாக்கில் நடந்த கூட்டத்தில் 20000 அப்பாவி மக்களுக்கு மாலை 5.15 க்கு அனைத்தும் தலைகீழானது
ஜெனரல் ரெஜினாலட் டயர் இவர்கள் அனைவரும் கூடியிருந்த மைதானத்திற்கு இருந்த ஒரே வழியினை அடைத்துக்கொண்டு வந்து நின்று. எந்தவித முன்னறிவுப்பும் இன்றி கூடியிருந்த 20000க்கும் அதிகமான மக்களின் மீது குண்டு மழை பொழிந்தான். இதுவே இந்திய சுதந்திர போராட்டத்தில் நாம் அனைவரும் படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை.

இந்த படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் கணக்கு 379 பேர் கொல்லப்பட்டதாகவும், இதில் 337 பேர் ஆண்கள், 41 சிறுவர்கள், ஒரு ஆறுவார கை குழந்தை என்றும் கணக்கு காட்டியது அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம். ஆனால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். குண்டுகளில் இருந்து தப்பிக்க மைதானத்தில் இருந்த கிணற்றில் குதித்தவர்களில் இறந்து போனவர்களின் உடல்களின் எண்ணிக்கையே 120யை தொட்டது. பிரிட்டிஷ் அரசாங்க கணக்கின் படி மொத்தம் 1500 குண்டுகள் சுடப்பட்டதாக சொல்கிறது.

இந்த சம்பவத்தை பற்றி சொல்லும் பண்டிட் மதன் மோகன் மாலவியா , லாலா கிரிதரி லால் போன்றவர் சொல்லுவது 1000த்துக்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டனர் என்று. ஏன் அப்பொழுது அமிர்த்சர் மருத்துவமனையில் சிவில் சர்ஜனாக இருந்த மருத்துவர் ஸ்மித் சொல்லுவது இவர்கள் சொல்லுவதை விட அதிகம். 1800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்கிறார். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் இதில் அடிபட்டவர்களை காப்பாற்ற முடியவில்லை அதனால் மேலும் உயிர் சேதம் அதிகமானதாக சொல்லுகிறார்கள். இன்று வரை ஜாலியன் வாலாபாக்கில் மரணித்தவர்களின் எண்ணிக்கையோ இல்லை காயம்பட்டவர்களின் எண்ணிக்கையோ முழுமையாக தெரியவில்லை.
இந்த சம்பவத்திற்கு பிறகு ஜெனரல் டயர் இங்கிலாந்து திரும்பினார் அவருக்கு ஒரு மணிபர்ஸில் 26000 ஸ்டெர்லிங்க் பரிசாக கொடுக்கப்பட்டது. அப்பொழுது பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக இருந்தவர் ஓ' ட்வையர் இவர் ஜெனரல் ரெஜினாலட் டயரின் நடவடிக்கையை ஆதரித்தவர் மேலும் இவரும் சேர்ந்து தான் இந்த படுகொலைக்கு திட்டம் தீட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இருவரும் இங்கிலாந்து சென்றுவிட்டனர்

ஆனால் அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட ஒருவர் நினைத்தால் எதையும் செய்யலாம் என்பதை நிருபித்தவர்தான் இந்த உத்தம் சிங்.

1919ம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்திற்கு பலிவாங்குவது என்று முடிவெடுத்த உத்தம் சிங் தன்னாலான அனைத்து முயற்சிகளிலும் இறங்கினார்.

1920ல் நைரோபி சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல முயற்சித்து முடியாமல் 1921ல் இந்தியா திரும்பினபிறகு
இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராட தொடங்கினார்.

1924ல் அமெரிக்கா சென்று மூன்று வருடங்கள் அங்கிருந்து புரட்சிக்கு வித்திட்டார்.

1927 ஜூலை மாதம் மேலும் 25 பேர்களுடன் இந்தியா திரும்பினார், அப்பொழுது அமெரிக்காவில் இருந்து ரிவால்வார்களும் குண்டுகளும் பெருமளவு வாங்கி வந்தார்.

1927 ஆகஸ்ட் மாதம் ஆயுதங்களுடன் பிரிட்டிஸ் அரசிடம் மாட்டி சிறைச்சாலை சென்றார். இவருக்கு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறைசாலையில் இருந்தார்.

1931ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட பொழுது இவரும் அதே சிறைச்சாலையில் தான் இருந்தார்.சிறை தண்டனைக்கு பிறகு வெளியில் வந்து விளம்பர பலகை வரைபவராக வாழ்க்கையை தொடர்ந்தார். ஆனால் இவரை பிரிட்டிஷ் காவல்துறை கண்காணித்துக்கொண்டே இருந்தது.

1933 - ல் பிரிட்டிஷ் காவல்துறை அனைவரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு காஷ்மீர் வழியாக இத்தாலி சென்று அங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து 1934 - ல் இலண்டன் சென்றடைந்தார். இதனிடையில் 1927ல் ரெஜினால்ட் டயர் மரணமடைந்துவிட்டார். ஆனால் ஓ' ட்வையர் விடுவதில்லை என்ற ஒரே குறிக்கோளுடன் காலம் கனிவதற்காக இலண்டனிலேயே காத்திருந்தார்.

1940 மார்ச் 13ம் தேதி இலண்டனில் உள்ள காக்ஸ்டன் ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இஸ்ட் இந்தியா கம்பெனியும் ராயல் சென்ட்ரல் ஆசியாவும் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் முடிந்த பிறகு அங்கு பேச வந்திருந்த ஓ' ட்வையர்ரை சுட்டு கொன்றார். மேலும் அப்பொழுது இந்தியாவிற்கான ஸ்டேட் செகரட்டரியாக இருந்த லார்ட் ஜெட்லான்ட்டையும் சுட்டார். ஜெட்லான்ட் காயத்துடன் தப்பிவிட்டார்.

உத்தம் சிங் சுட்டுவிட்டு தப்பிக்க முயற்சிக்காமல் அங்கேயே நின்றார். காவலர்கள் வந்து அவரை பிடித்து சிறையில் அடைத்தனர். நீதிமன்றத்தில் வழக்கு வந்த பொழுது உத்தம் சிங் நான் செய்த செயலுக்காக வருத்தப்படவில்லை, மேலும் இந்த தண்டனை ஓ' ட்வையர் கொடுக்க படவேண்டியதே என்று தெரிவித்தார். இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு
1940ல் ஜூலை மாதம் 31ம் தேதி துக்கிலடப்பட்டு இலண்டனிலேயே கொல்லப்பட்டார்..


ஓ' ட்வையர் கொலை செய்யப்பட்டது இந்தியாவிலும் அரசியல்வாதிகளால் விவாதிக்கப்பட்டது காந்தி முதற்கொண்டு அனைவரும் இதற்கு கண்டணம் தெரிவித்தனர் 1940ல். நேரும் இந்த சம்பவத்திற்கு ஓ' ட்வையர் கொல்லப்பட்டது தவறு இது தவறான முன்னுதாரணம் என்றார்.

1962ல் நேருவே முழுவதுமாக தனது கருத்தை மாற்றி அதுவும் சிறந்த சுதந்திர போராட்ட வீரகள் பகத்சிங், ராஜ்குரு போன்றவர்களுக்கு வழங்கப்பட்ட சாகித் என்ற பட்டத்தை வழங்கி. சாகித் உத்தம் சிங்கின் எதிரியின் மூக்கின் கீழ் சென்று நடத்திய போராட்டமே இந்தியாவின் விடுதலைக்கான மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும் என்று சொன்னார் .

1940ல் தூக்கிலடபட்டு இலண்டனில் புதைக்கப்பட்ட சாகித் உத்தம்சிங்கின் உடல் 1974 பஞ்சாபை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவின் முயற்சியாலும் இந்திய அரசின் முயற்சியாலும் இந்தியா கொண்டு வந்து சேர்க்கப்பட்டது அப்பொழுது அந்த மாவீரனின் உடலை வரவேற்க அப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சங்கர் தயாள் சர்மா, அப்போதைய பஞ்சாப் மாநில முதல்வர் ஜெயில் சிங் (இருவரும் பின்னாளில் ஜனதிபதியாக பதவி வகித்தார்கள்) அப்பொழுதைய பிரதமர் இந்திரா காந்தியும் விமானநிலையம் வந்து வரவேற்றார்கள்.

சாகித் உத்தம் சிங் ஜாலியன் வாலாபாக்கில் தனது மக்களை சுட்டு கொன்ற ஜெனரல் டயர் எந்தளவுக்கு எதிரியோ அதே போல் அன்று கவர்னராக இருந்த ஓ' ட்வையர்ரும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பொறுப்பு என்றே நினைத்தார். எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்பது தமிழில் நாம் அறிந்த ஓர் பழமொழி அதையே சாகித் உத்தம் சிங் செய்தார். அதாவது அம்பான ஜெனரல் டயர் கொல்லப்படுவது எவ்வளவு முக்கியமோ அதற்கு காரணமான கவர்னர் ஓ' ட்வையர்க்கு தண்டனை கொடுப்பதே அதைவிட முக்கியம் என்று முடிவெடுத்தார் அவரை முடிக்கும் வரை தொடர்ந்து போராடி வெற்றியும் கண்டார்.

மாவீரன் தீரன் சின்னமலை

மாவீரன் தீரன் சின்னமலை

 

மாவீரன் தீரன் சின்னமலை இந்திய விடுதலைப் போராட்ட மாவீரர் ஆவார்.கொங்கு நாட்டின் முதல் விடுதலைப் போராட்ட மாவீரர்.

இன்றைய ஈரோடு மாவட்டம் காங்கேயம்அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர். அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர், தாயார் பெயர் பெரியாத்தா.

இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். இவர்கள் புவிக்கும் செவிக்கும் புலவோர்கள் சொல்லும் கவிக்கும் இனிமை செய்ததால் சர்க்கரை என பெயர் பெற்றார்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம் ,தடிவரிசை ,வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை கற்றுத் தேர்ந்தார்.கொங்குநாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்குச் சென்றது.

ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகளுக்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் பெற்றார் .

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பனி கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளாவிலும் கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்றுசேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார்.

டிசம்பர் 7 1782 - இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார்.

மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தைஉண்டாக்கியது.

நெப்போலியனிடம் படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான் அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆனதிப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து ஓடாநிலை என்னும் ஊரில் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார்.

ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை - பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர் துணையோடு பீரங்கிகளும் தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலை தன்னைப் பாளையக்காரராக அறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார்.

போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாட்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில்வேளாளர், நாயக்கர், தேவர்,, வேட்டுவர்,வன்னியர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். ஓமலூர் சேமலைப் படையாச்சி, கருப்பசேர்வை, ஃபத்தே முகம்மது உசேன், முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.

வெற்றி

1801-இல் ஈரோடு காவிரிக்கரையிலும், 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அறச்சலூரிலும் ஆங்கிலேயர்களுடன் நடைபெற்ற போர்களில் சின்னமலை பெரும் வெற்றி பெற்றார். ஓடாநிலைப் போரில் ஆங்கிலத் தளபதி கர்னல் மேக்ஸ்வெல் தலையைக் கொய்து மொட்டையடித்துச் செம்புள்ளி கரும்புள்ளி குத்தி ஊர்வலம் விட்டது குறிப்பிடத்தக்கது. சின்னமலையின் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்க்கக் கள்ளிக்கோட்டையிலிருந்து மிகப்பெரும் அளவில் பீரங்கிப்படை வந்தது. சுபேதார் வேலப்பன் அறிவுரைப்படி சின்னமலை ஓடாநிலையிலிருந்து தப்பிப் பழனிமலைத் தொடரில் உள்ள கருமலை சென்றார்.
தூக்கிலிடப்படல்


போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31,1805 அன்று தூக்கிலிட்டனர். தம்பியரும், கருப்ப சேர்வையும் உடன் வீரமரணம் எய்தினர்.

சின்னமலை நினைத்திருந்தால் கொங்குநாட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வரிவசூலில் பத்தில் மூன்று பங்கு பெற்றுத் தொடர்ந்து ஆட்சி செலுத்தி சுதேச சமஸ்தானம்போல 1947 வரை விளங்கியிருக்கலாம். ஆங்கிலேயரும் அவ்வாறே வேண்டிக்கொண்டனர். ஆனால் மாவீரன் சின்னமலை அதை மறுத்து வீரமரணம் அடைந்தார். மாவீரன் சின்னமலை ஆங்கில வெள்ளத்தைத் தடுக்கும் பெருமலையாக விளங்கினார்.

கௌரவிப்பு

முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது. தீரன் சின்னமலைக்குத் தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.



இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

Thursday, September 29, 2011

“என் கணவர்” திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

‎1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் “என் கணவர்” என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

                      வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்… விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.
உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.
கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?
வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?
கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முயும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.
அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா?
கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.
கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.
காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸூரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை
சிஷ்யருக்குக் குறைவு இராது.செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!
இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.
புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.
புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்துவிட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. “விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!” என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிற

Wednesday, September 14, 2011

இந்தியா - இயற்கை அமைப்பு.


இந்தியா - இயற்கை அமைப்பு.

        ஆசியாவில் இமயமலைத்தொடரால் பிரிக்கப்பட்ட இந்திய உபகண்டம் சுமார் 15,84,000 சதுர மைல் பரப்புடையது. இதில் இந்தியா சுமார் 12,22,000 சதுர மைல்; பாகிஸ்தான் 3,61,200 சதுர மைல். 1941 ஜன சங்கியைப்படி மொத்தம் 38.81 கோடியில், இந்தியாவில் 31.77 கோடியும், பாகிஸ்தானில் 7.11 கோடியுமாகப் பி¡¢ந்தனர். இந்தியாவில் இன்றைய ஜனத்தொகை சுமார் 34.2 கோடி இருக்கும்.

இந்தியாவின் வட கோடியில் காஷ்மீரையடுத்து வடக்கில் ஸிங்கியாங் என்ற சீத்துருக்கிஸ் தானமும், வடமேற்கில் ஆப்கனிஸ்தானையடுத்து டாஜிகிஸ்தான் முதலிய ரஷ்யகுடியரசுகளும், மேற்கில் பாகிஸ்தான் உள்ளன. இதற்குக் தெற்கில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை, பியாஸ், சட்லெஜ் நதிகளோரமாகச் சென்று, ராஜஸதான் எல்லை வழியாக கட்ச் வளைகுடாவில் முடிகிறது.

காஷ்மீருக்குக் கிழக்கில் இந்திய எல்லை திபேத்தையொட்டி தெற்கே வந்து, இமயமலைச் சாரலிலுள்ள நேபாளம், ஸிக்கிம், பூடான் சமஸ்தானங்களுக்குத் தெற்கில் கிழக்கே சென்று, வடக்கிழக்குக்கோடியில் சீன எல்லையைத் தொட்டுக்கொண்டு, தெற்கில்  திரும்பி பட்காஸ், நாகா மலைத் தொடர்கள் வழியாக பர்மாவின் மேற்கு எல்லையாக அமைகிறது. இவ்விடத்தில் அஸ்ஸாம், பீகார், மேற்கு வங்காளம் இவற்றிற்கிடையில கிழக்குப் பாகிஸ்தான் புகுந்திருக்கிறது. இதன் தென்கிழக்குக் கோடி பர்மா எல்லையைத் தொடுகிறது. இந்தியாவை கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் சூழ்ந்துள்ள கடல் எல்லை சுமார் 3000 மைல் நீளமிருக்கும். அரபுக் கடலில் லக்ஷத் தீவுகளும், வங்கக்கடலில் அந்தமான், நிகோபார் தீவுகளும் இந்தியாவுடையது.

பூமத்தியரேகைக்கு வடக்கில் 8 டிகி¡¢ முதல் 37 டிகி¡¢ வரை பரவியுள்ள இந்தியாவை கடக ராசி சா¢பாதி பி¡¢ந்தாலும், இந்தியா பூராவும் அதியுஷ்ண நிலையுள்ள தேசமாகவே இருக்கிறது. இயற்கை அமைப்பில் இமய மலைப்பிரதேசம், மத்தியச் சமவெளி, தக்ஷ¢ண பீடபூமி என மூன்றாக பி¡¢க்கலாம்.

இமயமலைப் பிரதேசம்:

இமயமலைத்தொடர் காஷ்மீர் முதல் பர்மாவரையில் சுமார் 1500 மைல் சீனம் வியாபித்திருக்கிறது. சராசா¢ அகலம் 200 மைல் இருக்கும். இதன் வடமேற்கு கோடியில் சிந்துவும், அதன் உபநதிகளும், மத்தியில் கங்கை, யமுனை நதிகளும், கீழ்க்கோடியில் பிரம்மபுத்ராகவும் இம்மலைத்தொடரைத் துளைத்துக்கொண்டு தெற்கே பாய்கின்றன. உலகிலேயே அதிக உயரமான மலைச்சிகரங்கள் எவரெஸ்ட், கிஞ்ஜிங்ஜங்கா, காட்வின் ஆடஸ்டி முதலியன இத்தொடா¢ல் உள்ளன. காஷ்மீரத்திலிருந்து ஸிக்கியாங் செல்லும் ஜோஜிலா, காரகோரம் கணவாய்களும் கிழக்குபஞ்சாபிலிருந்து திபேத்து செல்லும் ஷிப்கி கணவாயும், டார்ஜிலிங் அருகில் கலிம்பாங் பள்ளத்தாக்கும், அஸ்ஸாமிலிருந்து பர்மா செல்லும் ஹ¥காங் பள்ளத்தாக்கு மணிப்பூர் பாதைகளும் இமயத்தில் உள்ள முக்கிய பாதைகளாகும்.

இம்மலைத் தொடர்களுக்கிடையில் எக்காலத்திலும் பனி உருகி ஜலம் வருவதால் கங்கை, யமுனை முதலிய நதிகள் ஜீவ நதிகளாக இருக்கின்றன. குளிர் காலத்தில் மத்திய ஆசியாவிலிருந்து வரும் குளிர் காற்றை இத்தொடர் தடுத்துவிடுவதுடன், கோடையில் தென்மேற்குப் பருவக் காற்று அடிக்கும்போது மத்திய சமவெளியில் மழை பெய்யும்படி செய்கிறது. மலைச்சாரலில் நிறைய நாடுகளுக்கும் மின்சார சக்தி வசதிகளும் உண்டு. தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று 24 Jul, 2011 0 Comments மின்னஞ்சல் அச்சிடுக PDF 0

தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.

பழங்காலம் சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300) நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500) இடைக்காலம் பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900) காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200) உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500) புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800) புராணங்கள், தலபுராணங்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் இக்காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டு கிறிஸ்தவ தமிழ் இலக்கியம் புதினம் இருபதாம் நூற்றாண்டு கட்டுரை சிறுகதை புதுக்கவிதை ஆராய்ச்சிக் கட்டுரை.

லூர்துமாதா வரலாறு -பிரான்ஸ்.


லூர்துமாதா வரலாறு -பிரான்ஸ்.

பிரான்ஸ் நாட்டின் தென் - மேற்கு பகுதியில் Midi - Pyrénéees என்னும் மாநிலத்தில் லூர்து நகரம் அமைந்துள்ளது.அமெரிக்கா என்றால் நமக்கு சுதந்திர தேவியின் சிலை ஞாபகம் வருவது போல் ப்ரான்ஸ்

என்றால் அனைவருக்கும் லூர்து மாதா கோயில் தான் ஞாபகம் வரும். இயற்கை அழகு கண்கொள்ளாத வண்ணம் அமைந்திருக்கும் பிரான்ஸ் நாட்டில் அமைந்துள்ளது "லூர்ட்ஸ்" என்ற சின்னஞ்சிறு நகரம்.தென்மேற்கு ப்ரான்ஸ் பகுதியில் "Midi - Pyrénéees" என்ற மலைத்தொடரின் மத்தியப் பகுதியில் உள்ள இந்தச் சிறிய ஊரை,ஒவ்வொரு வருடமும் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகிறார்கள்.இந்த சின்னஞ்சிறு ஊரில் அப்படியென்ன விசேஷம்?

லூர்ட்ஸ் என்னும் இவ்வூரில் அமைந்துள்ள மாதா கோயில்,கோயிலின் அடிவாரத்தில் உள்ள "கிரிட்டோ" எனப்படும் குகை,அந்தப் பகுதியில் குபுகுபுவென பொங்கி வரும் கற்கண்டாய் இனிக்கும் தெளிவான புனிதமான ஊற்று நீர்.ஊரின் நடுவே மிகவும் ப்ரம்மாண்டமாக மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது புனித லூர்து மாதா கோயில்

உலகெஞ்கும் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பாஸ்லிகாக்களில் ஒன்றான இந்த ஆலயத்தை மாதாவே விரும்பி அமைத்துக் கொண்ட கதையை பார்க்கலாம்.

19ம் நூற்றாண்டில் கேவ் நதியின் கரையில் பல மாவு மில்கள் அமைக்கப்பட்டிருந்தன.அத்தகைய மில் ஒன்றில் பணி புரிந்து வந்த பிரான்ஸிஸ் தன் மனைவி லூயிஸ் சௌபிரஸ் மர்றும் 4 குழந்தைஅக்ளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.இனிமையான இவர்களின் வாழ்வில் திடீரென துன்பங்கள் தொடர்ந்து வரத்தொடங்கின.

மில்லில் வேலை செய்யும் போது சிறு கல் ஒன்று பிரான்ஸிஸ்ஸின் இடதுகண்ணில் புகுந்து கண்பார்வை பறிபோயிற்று.2 மூட்டைகள் மாவினை திருடியதாக அவர்மேல் தவறான பழி விழு,எட்டு தினங்கள் சிறையிலடைக்கப்பட்டார்.ஊரெங்கும் பஞ்சமும்,காலரா நோயிம் பரவிற்று.

இந்நோய் பிரான்ஸிஸ்ஸின் மூத்த மகளான பெர்னாடெட்டையும் தாக்கிற்று.வசதியில்லாத காரணத்தினால் நடுத்தெருவிற்க்கு வந்த குடும்பத்தினரைப் பார்த்து பரிதாபப்பட்டு,அவர்களின் உறவினர் ஒருவர் பழைய சிறையான "காசோட்" என்ற அறையை அவர்கள் தங்குவதற்க்காக அளித்தார்.

தந்தை முதலில் சிறைக்கு சென்றார்,இப்போது குடும்பத்துடன் அனைவருமே சிறையில் தங்குகிறார்கள் என ஊரில் பலர் அவர்களைக் கேலி செய்தனர்.உடல்நலமில்லாததாலும்,ஊர்ப் பேசிய கேலியினாலும்,பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டாள் பெர்னாடெட்.பதினான்கு வயதாகியும் பள்ளிக்குச் செல்லாததால் ஆங்கிலத்திலோ,ப்ரெஞ்சிலோ பேச,படிக்க,எழுத தெரியாது.

அவளுக்குப் பேசத் தெரிந்தது கூட மாறுபட்ட பிரெஞ்சு மொழிதான்.அவள் மான்க்கவலைகளை வாரா வாரம் மாதா கோயிலுக்கு சென்று முறையிட்டு அழுவாள்.

ஊற்று நீர் பெருகுமிடத்தில் இருக்கும் மாதா

1858ம் ஆண்டு பிப்ரவரி பதினொன்றாம் தேதி தன் தோழிகளுடன் காட்டில் கள்ளிப் பொறுக்கவும்.ஆடு மேய்க்கவும் சென்றாள்.கேவ் நதிக்கரையில் பாறைகள் நிறைந்த காட்டில் தோழிகள் விறகு வெட்டிக் கொண்டிருந்த போது,பெர்னாடெட்டிற்கு காற்றில் ஒரு ரீங்கார ஒசை கேட்டது.நிமிர்ந்து பார்த்தவர்களுக்கு பாறையின் நடுவே ஒரு இளம்பெண்,கருணை முகத்துடன்,சுற்றிலும் ஒளிவட்டம் வீச நின்றிப்பது தெரிந்தது.என்னவென்று புரிந்து கொள்ளும் முன் அந்தப் பெண் மறைந்து விட்டாள்.

ஆர்வம் மேலிட,தொடர்ந்து அடுத்த நாள் அதே பகுதிக்குப் பெர்னாடெட் போன போது திரும்பவும் அதே காட்சியைக் கண்டாள்.3 ம் நாளும்,4 நாளும் காட்சித் தந்த பிறகு பெர்னாடெட்டிடம் அந்த இளம்பெண்,

"தொடர்ந்து உண்ணால் இந்தப் பாறைகள் நிறைந்த பகுதிக்குப் 15 நாட்களுக்கு வரமுடியுமா?" என்று கேட்டாள். "முடியும்" என்று பதிலளித்த பெர்னாட்டெட்டிடம் "உனக்கு இவ்வுலகில் சந்தோஷத்தை அளிக்க முடியாவிட்டாலும் அவ்வுலகில அளிப்பேன்" என்று கூறி மறைந்தாள்.

தொடர்ந்து 15 நாட்கள் கிரிட்டோவிற்க்குச் சென்ற போது,மேலும் மேலும் தரிசனங்கள் கிடைத்தன.8 தரிசனத்தின் போது "தவத்தில் ஈடுபடு! பாவப்பட்டவர்களுக்காக ஜபம் செய்!" என்ற ஆணை கிடைத்தது.9 வது முறை காட்சியளித்த போது அந்த இளம்பெண் பெர்னாடெட்டை அருகில் அழைத்து,"இக்குகையில் உள்ள மண்ணை உன் நகங்களினால் கீறு,அதில் தோன்றும் ஊற்று நீரில் உன் உடலைக் கழுவிய பிறகு அதனைப் பருகுவாயாக " என்று கூறினாள்.

அவள் வார்த்தைகளுக்குப் பதிலேதும் கூறாமல் அவ்வாறே செய்த போது,மண்ணாக இருந்த ஊற்று நீரைப் பருகியதும் உடலில் உள்ள வியாதியும்,அதனால் ஏற்பட்ட சோர்வும் நீங்கிய உணர்வைப் பெற்றாள்.ஆஸ்துமா நோயினால் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு மூச்சு நன்றாக விட முடிந்தது.புல்லரிப்புடன் திரும்பிப் பார்த்த போது ஊற்று நீர் குபுகுபுவெனப் பெருகத் தொடங்கியது.

இவர் தான் பெர்னாடெட்

அடுத்து வந்த தரிசனங்களில் அந்த ஊற்று நீரை பருகினால் உடலில் உள்ள நோய்கள் நீங்கப் பெறும் என்பதை மேலும் மேலும் உறுதிப்படுத்தினாள் அந்த இளம்பெண்.13 வது தரிசனத்தின் போது, "போய்ப் பாதிரியார்களையும்,பொது மக்களையும் திரளாக அழைத்து வந்து இங்கு எனக்கு ஒரு ஆலயம் எழுப்பச் சொல்"என்று அப்பெண் கூறினாள்.

அடுத்த 2 தரிசனங்களிலும் அதே வார்த்தைகளைக் கூறவே,யார் அந்த இளமங்கை என்றறியும் ஆவல் பெர்னாடெட்டிற்கு ஏற்பட்டது.16 வது முறை தரிசனம் தந்த போது, "ஒளி வெள்ளமாகத் திகழும் மாதாவே!தாங்கள் யார்? என்று பெர்னாடெட் கேட்டதும், "நான்தான் புனித தூயமேரி மாதா!" என்ற பதில் கிடைத்தது.

அறிவிலோ,செல்வத்திலோ,சுகத்திலோ,உடல்நலத்திலோ எந்தவிதத்திலும் தகுதியில்லாத ஏழையான தன்னைத் தேர்ந்தேடுத்து, ஒருமுறை, இருமுறையல்ல 18 முறை காட்சியளித்ததை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தாள் பெர்னாடெட்.

அடுத்த நாள் ஊர் மக்களையும்,படித்தவர்களையும்,பெரியோர்களையும் கிரிட்டோவிற்கு அழைத்து வந்தாள் பெர்னாடெட்.அவளுக்கு மாதாவின் தரிசனம் கிடைத்த போது மாதாவின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி நின்றாள்.பெழுகுவர்த்தி உருகி பெர்னாடெட்டின் கையிலேயே 10 நிமிடங்கள் எரிந்தது.ஆனால் பெர்னாடெட்டின் கையைப் பாதிக்கவில்லை. சுற்றி நின்றிருந்த மக்களுக்கு மாதாவைக் காண முடியாவிட்டாலும்,மாதாவை தரிசித்துக் கொண்டிருக்கும் பெர்னாடெட்டின் பரவசமான முகம் தெரியவே,அவர்கள் உடல் புல்லரித்தது.அதற்கு அடுத்த நாள், 18 வது தரிசனம் கேவ் நகரின் அக்கரையில் உள்ள புல்வெளியில் பெர்னாடெட்டுக்குக் கிடைத்தது,இதுவரை தன் வாழ்நாளில் என்றுமே கண்டிராத அளவு அழ்கும்,கருணையும் ததும்பும் மாதாவைக் கண்டாள்.

மூத்த பிஷப்புகளையும்,மூத்த பாதிரியர்களையும் பல பெரியோர்களையும் அறிஞர்களையும் தேடி சந்தித்து ,தனக்கு 18 முறை மாதா தரிசனம் அளித்ததையும்,ஊற்று நீரின் மகிமையை விளக்கியதையும்,தனக்கு கோயில் எழுப்புமாறு கூரியதையும் எடுத்துக் கூறினாள்.ஆனால் அவள் வார்த்தைகளை உடனே நம்ப அவர்கள் தயாராக இல்லை.

"மாதாவின் வார்த்தைகளை உங்களிடம் எடுத்துக் கூறுவது மட்டுமே என் வேலை.நம்புவதும்,நம்பாமலிருப்பதும் உங்கள் இஷ்டம் "என்று ஒதுங்கி விட்டாள் பெர்னாடெட்.அவளது வார்த்தைகளை வழக்காக பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது.இதற்கிடையில் நோயினால் பாதிக்கப்பட்ட பலர்,ஊற்று நீரைப் பருகி,மாதாவை வேண்டி பல வகையான நோய்களிலிருந்து குணமடையத் தொடங்கினார்கள்.பொது மக்களின் நம்பிக்கை பெருகி,பலரும் மாதாவை தரிசித்த பெர்னாடெட்டை நாடி வணங்கத்தொடங்கினர்.

மிகவும் வறுமையான சூழ்நிலையில் இருந்த போதும்,தன்னையோ தன் குடும்பத்தையோ வியாபாரப் பொருளாக பொதுமக்கள் மாற்றுவதை விரும்பாத பெர்னாடெட் லூர்ட்ஸ் நகரிலிருந்து நெவர்ஸ் என்ற நகருக்குச் சென்று,அங்குள்ள கிறிஸ்துவ மிஷனின் கான்வெண்ட்டில் சேர்ந்து உடல்நலம் குன்றியவர்களுக்காகச் சேவை செய்யத் தொடங்கினாள்.திரும்ப லூர்ட்ஸ் நகருக்கு வராமலேயே 1879ம் ஆண்டில் தன் 35 வதுவயதில் உயிர்நீத்து அவ்வுலகில் இன்பம் பெற மாதாவை சரணடைந்தாள்.

நெவர்ஸ் கான்வெண்ட்டிலேயே புதைக்கப்பட்ட அவளது உடல்ன,கோயில் கட்டுவதற்காக வாதாடப்பட்ட வழக்கிற்காக 1909ம் ஆண்டு ஒரு முறையும்,1919ம் ஆண்டு ஒரு முறையும் வெளியே எடுக்கப்பட்டது.சிறிதளவு கூட பழுதடையாமல் அவள் உடல் இருந்ததைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.புனிதமேரி மாதாவின் அருள் பூரணமாகப் பெர்னாடெட்டின் மேல் இருப்பது அனைவருக்கும் தெளிவாயிற்று.

லூர்ட்ஸ் நகரில் மாதாவின் விருப்பபடி மிகப் பெரிய ஆலயம், 3 நிலையில் எழுப்பப்பட்டுள்ளது.உலகெங்கிலிருந்தும் மக்கள் திரளாக வந்து மாதாவை வணங்கி ஊற்றுநீரைப் பருகி பலவிதமான நோய்களிலிருந்து குணமடைந்துள்ளனர்.நோயாளிகள் பலர் மாதாவின் கருணையை நாடி ஸ்ட்ரெச்சரில் டிரிப் பாட்டிலுடனும்,சக்கர வண்டிகலீல் ஊனமுற்றவர்களும் திரளாக வருவதை இங்கு காணலாம்.

கைகால் முறிவு,கண்பார்வை பாதிப்பு,காசநோய்,ஆஸ்துமா,பாரிசவாயு,உடலில் பல இடங்கலீல் ஏற்பட்டுள்ள ட்யூமர் என்ற கட்டிகள் எனப் பலவித நோய்களில் இருந்து குணமடைந்த, பல நோயாளிகள் ஊற்று நீரின் பிரசித்ததை கோயிலின் ரிஜிச்தரில் பதிவு செய்துள்ளனர்.பிப்ரவரி 12ம் தேதி பெர்னாடெடிற்க்கு மாதாவின் முதல் தரிசனம் கிடைத்த நாள் "உலக நோயாளிகளின் நாளா"கக் கருதப்படுகிறது.

4,000 மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்த லூர்ட்ஸ் நகரம் இன்ரு மிக் முக்கியமான புண்ணியஸ்தலமாக பிரபலமடைந்துவிட்டது.பல்வேறு யாத்ரீகர்கள் வந்து தங்குவதால்.பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரத்திர்க்கு அடுத்தபடியாக இங்குதான் 270 ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு சீஸன் எனப்படும் பருவகாலத்திலும் 6 மில்லியன் கடிதங்கள் நோயாளிகளிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் பிரார்த்தனையாக வந்து சேர்கிறது.இண்டர்நெட்டின் மூலமாகவும் பிரார்த்தனைகள் பதிவு செய்யப்படுகின்றன.அவை மாதாவின் பாதத்தில் சமர்ப்பிக்கபடுகின்றன.

இந்த ஆலயம் அமைந்துள்ள ஊரினை "துலூஸ்" (TOULOUSE) என்றா நகரத்திற்கு விமானம் மூலம் சென்ரால்,அங்கிருந்து சாலை வழியாக சென்றடையலாம்.வழியெங்கும் இயற்கை காட்சிகளே நம்மை நோயிலிருந்து பாதி விடுபடச்செய்யும்.போகும் போது கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டியது புனித ஊற்றுநீரை நிரப்பி வரத் தேவையான பாட்டிலகள் அல்லது ஜெரிகேன்கள்!மாதா பெர்னாடெட்டிற்கு காட்சியளித்த குகையைத் தொட்டுப் பரவசமடையலாம்.பெழுகுவர்த்திகளை நாமே பணம் போட்டு எடுத்துச் சென்று மாதாவின் முன் ஏற்றலாம்.

யாத்ரீகர்களின் பேரில் ஆலயம் கொண்டுள்ள அளவற்ற நம்பிக்கையினால் நம்மைக் கட்டுப்படுத்த,மெழுகுவர்த்தி விற்க, புனித நீரை நிரப்ப எங்கும் ஆட்களில்லை.புனிதநீர் சிறிய ஊற்றில் பொங்குவதை கண்ணாடி வழியே காணலாம்.அந்நீரை பல்வேரு குழாய்களில் பொதுமக்கள் சிரமமின்றி பிடித்துக் கொள்ள குழாய்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.

இந்த விஞ்ஞான யுகத்தில் இன்னும் நடந்து கொண்டிருக்கும் தெய்வீக அற்புதங்களஒ அங்கு காணலாம்.இந்த புனிதமாதாவை தரிசிக்க விரும்புபவர்கள் இந்தியாவில் கூட தரிசிக்கலாம்.புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் என்னும் நகரத்தில் லூர்துமாதா கோயில் இருக்கு.பிரான்ஸ் நாட்டிலிருந்து மாதாவின் சிலை வரவைக்கப்பட்டு இங்கு கோயில் அமைந்துள்ளது.நாமும் மாதாவை தரிசித்து அவர்களின் அருளை பெறுவோம்